திருத்தணி சட்டமன்ற தொகுதியில்100 % வாக்குவிழிப்புணர்வு
![]()
திருத்தணி சட்டமன்ற தொகுதியின் பல்வேறு பகுதிகளில் சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் :
திருவள்ளூர் மார்ச் 26 : திருத்தணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சட்டமன்ற பொது தேர்தல்-2026யை முன்னிட்டு 100 சதவிகித வாக்குப்பதிவை வலுயுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் தலைமையில் நடைபெற்றது (ம) வாக்குச்சாவடி மையங்கள் பறக்கும் படை மற்றும் நிலை குழுக்கள் வாகனங்களை சோதனையிடும் பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி திருத்தணி வட்டம் திருத்தணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டாக்டர் இராதா கிருஷ்ணன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் “தேர்தல் திருவிழா-தமிழ்நாட்டின் பெருவிழா” சட்டமன்ற பொது தேர்தல்-2026யை முன்னிட்டு 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து, செஃல்பி பூத்தில் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டு, பள்ளி மாணவ மாணவியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களுக்கு உறுதிமொழி பத்திரங்களை (சங்கல்ப் பத்திர) வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பின் வாக்குச்சாவடி மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் குமாரராஜீபேட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் சட்டமன்ற பொது தேர்தல்-2026யை முன்னிட்டு 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட தேர்தல் அலுவலர் மு.பிரதாப் தலைமையில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடி, வாக்குச்சாவடி மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நிறைவாக, சட்டமன்ற பொது தேர்தல்-2026யை முன்னிட்டு, திருத்தணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொன்பாடி சோதனைச்சாவடி பகுதியில் மாவட்ட தேர்தல் அலுவலர் பறக்கும் படை மற்றும் நிலை குழுக்கள் வாகனங்களை சோதனையிடும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதில் திருத்தணி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் திருத்தணி வருவாய் கோட்டாட்சியருமான என்.எம்.கனிமொழி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் திருத்தணி வட்டாட்சியருமான குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

