ஷிங்க்கிரிக்கெட்விளையாட்டுஉபகரணங்கள்விற்பனை
![]()
கோவை
கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில், ஷிங்க் எனும் பிரீமியம் கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் அங்காடி திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது..
இந்திய வருமான வரித்துறை அதிகாரியும், ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு துணை இயக்குநருமான பிரபாகரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்..
கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில், கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வீரர்களுக்காக உருவாக்கப்பட்ட பிரீமியம் கிரிக்கெட் கடையான ஷிங்க் எனும் அங்காடியின் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. உயர்தர கிரிக்கெட் உபகரணங்கள் மற்றும் கிரிக்கெட் விளையாட்டிற்க்கு தேவையான அனைத்து விளையாட்டு உபகரணங்களும் ஒரே இடத்தில் கிடைக்க வேண்டும் என்ற, நோக்குடன் இந்த கடை தொடங்கப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில், இந்திய வருமான வரித்துறை அதிகாரியும், ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு துணை இயக்குநருமான பிரபாகரன், கோவை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சந்திரமௌலி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கேற்றிவைத்தும் திறந்து வைத்தனர்.
கூடுதலாக “கன்னகி” திரைப்பட இயக்குநர் யஷ்வந்த் கிஷோர் மற்றும் பவிழம் ஜுவல்லர்ஸ் இயக்குநர் லிஜோ எஸ். சுங்கத் ஆகியோர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்
மேலும் இந்நிகழ்ச்சியில் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தொடரில் நடித்த நடிகை ஷாலினி பங்கேற்று வாழ்த்திக்கள் தெரிவித்தார்.
மேலுல் இந்த கடை குறித்து, கடையின் உரிமையாளர் கூறியதாவது..
அனைத்து தரப்பு கிரிக்கெட் வீரர்களுக்கும் தேவையான அனைத்து, உயர்தர கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்களை வழங்கும் ஒரு மையமாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இக்கடையானது ஆர்.எஸ். புரத்தில் அமைந்துள்ளதால், அனுபவம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என கூறினார்.
கோவை மாநகர விளையாட்டு வீரர்களின் திறன்களை வெளிபடுத்தவும், கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சிக்கு மேலும் ஒரு முக்கிய கட்டமாக ஷிங்க் விளங்கும் என தெரிவித்தார்.

