பொது அதிகார ஆவணத்தை அசல்ஆவணமாக ஏற்கவேண்டும்

Loading

பதிவு சட்டப்பிரிவு 34C,55A அடிப்படையில் பொது அதிகார ஆவணத்தைஅசல் ஆவணமாக ஏற்றுபதிவு செய்யஉத்தரவிட வேண்டும்

 

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐஏஎஸ் அவர்களுக்கு பொதுமக்களின் நலன் கருதி பதிவு சட்டப்பிரிவு 34C காரணமாக அசல் ஆவணம் இல்லாமல் பகுதி மனைகளின் பதிவு மறுப்பு – பதிவு சட்டப்பிரிவு 55A அடிப்படையில் பொது அதிகார ஆவணத்தை அசல் ஆவணமாக ஏற்று பதிவு செய்ய உத்தரவு வழங்க கோரிக்கை வைத்து கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில்..

தமிழ்நாடு பதிவுத்துறை, கடலூர் பதிவு மண்டலத்திற்குட்பட்ட விருத்தாச்சலம் பதிவு மாவட்டம், விருத்தாச்சலம் ஒன்றாவது இணை சார் பதிவாளர் அலுவலக எல்லைக்குட்பட்ட எருமனூர் கிராமத்தில்  புல எண்கள் 393/6 இல் அமைந்துள்ள நிலத்தை அபிவிருத்தி செய்து பியரல் சிட்டி என்ற பெயரில் DTCP (122/2024) மனை பிரிவு அமைத்து  52 எண்ணிக்கையிலான மனை பிரிவு திரு.A.மணி என்பவரால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முழு வீட்டுமனை பிரிவிலிருந்து 18எண்ணிக்கையிலான பகுதி மனைகளை மாத்திரம் திரு.M.அன்வர் பாஷா என்பவர் சட்டப்படி பொது அதிகார ஆவணம் (Power of Attorney) எழுதி பெற்றுள்ளார்.

அவரிடம் பொது அதிகார ஆவணத்தின் அசல் இருப்பினும், முந்தைய முதல்வர் திரு.A.மணி அவர்களின் பெயரில் உள்ள அசல் ஆவணம் அவரிடம் இல்லை. காரணம், முழுமையான அதிகாரம் பெறாமல் பகுதி மனைகளுக்கான அதிகாரம் மட்டுமே பெறப்பட்டுள்ளது. மூல அசல் ஆவணம் நில உரிமையாளரிடமே உள்ளது. அவர் தற்போது உடல்நிலை பாதிப்பில் உள்ளார்.

இந்நிலையில், விருத்தாச்சலம் ஒன்றாவது இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவிற்காக தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள்,“முந்தைய உரிமையாளரின் அசல் ஆவணம் இருந்தால் மட்டுமே பதிவு செய்ய இயலும்”என்ற காரணத்தால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

இதற்கான காரணமாக, இந்திய குடியரசுத் தலைவர் அவர்களின் ஒப்புதலுடன் ஜனவரி 2026 இல் இயற்றப்பட்டுள்ள பதிவு சட்டப்பிரிவு 34C மேற்கோள் காட்டி பதிவு மறுக்கப்படுகிறது. ஆனால், இதற்கு முன்பே பதிவு சட்டப்பிரிவு 55A-இன் கீழ்,பகுதி மனைகளுக்காக வழங்கப்பட்டுள்ள பொது அதிகார ஆவணத்தின் அசல் ஆவணம் இருந்தால் அதன் அடிப்படையில் பதிவு செய்யலாம் என தெளிவுரை வழங்கி, தங்களது பதிவுத்துறை சார்பில் 22482/C1/2022 Dt.02.02.2023 ஆக சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, நடைமுறையில் அமலில் உள்ள சட்டத் தெளிவுரையை பின்பற்றாமல் புதிய சட்டப்பிரிவை காரணம் காட்டி பதிவு மறுக்கப்படுவது சட்ட ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் முரண்பாடாகும்.இதன் விளைவாக:* மனைகளை முன்பதிவு செய்த பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

* வங்கிக் கடன் பெற்று நாள்–நட்சத்திரம் பார்த்து பெரியவர்களின் ஆசி பெற்று, உரிய ஆவணம் தயாரித்து பதிவுத்துறை இணையதளத்தில் முன்பதிவு செய்து, பதிவு செய்ய வந்தவர்கள், மேற்கண்ட காரணங்களின் அடிப்படையில் பதிவு செய்ய முடியாமல் மிகுந்த உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

0Shares