சட்ட மன்ற தேர்தலில் 100 % வாக்களிக்க வேண்டும்
![]()
கோவை
அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் சார்பாக வருகின்ற சட்ட மன்ற தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை சரவணம்பட்டி அடுத்த கீரணத்தம் பகுதியில் நடைபெற்றது
மாண்புமிகு நீதியரசர் கற்பகவிநாயகம் அவர்களது, வழிகாட்டுதலின் பேரில், அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுக்க பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை சரவணம்பட்டி அடுத்த கீரணத்தம் பகுதியில் உள்ள ஸ்டிட்ஜ்வெல் நிறுவன வளாகத்தில், வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் மகளீர் தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவன தலைவர் ஆர். கே. குமார் வரவேற்புரையாற்றினார். மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர் செந்தில் குமார் ஆகியோர் தேர்தல் குறித்து உரையாற்றினர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைப்பின் மகளீரணி வழக்கறிஞர் பிரிவின் மாவட்ட தலைவரும், வழக்கறிஞருமான தேன்மொழி என் வாக்கு, என் உரிமை எனும் தலைப்பில் விழா பேருரையாற்றினர். அப்பொழுது வாக்கு செலுத்துவதன் அவசியம் குறித்தும், வாக்காளர்களின் கடமை குறித்தும் எடுத்துக்கூறினார். தொடர்ந்து மகளீர் தினவிழாவை போற்றும் வகையில் பெண்கள் கடந்து வந்த பாதைகள் குறித்தும், இன்றைய நவீன உலகில் பெண்களின் பங்களிப்பு குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார். பெண்கள் அறியாமை எனும் இருட்டில் இருந்து மீண்டு வர இத்தனை ஆண்டுகள் கடந்தும், அறியாமை இருள் இன்னுமும் கிராம புறங்களில் இருந்து வருகின்றது. இவற்றை கழைய நகரத்து பெண்கள் முன் வர வேண்டும் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சண்முக சுந்தரம், அமைப்பின் மாவட்ட செயலாளர் விஜயராவ், துணை தலைவர் எல்.ஐ.சி ராஜேஷ், அமைப்பின் மகளீரணி மாவட்ட தலைவர் எல்ஐசி. சாந்தி, மற்றும் சிகாமணி, கலைகண்ணன், துணை ஆசிரியர் செந்தில் குமார், ஆசிரயர் சண்முக சுந்தரம், சரவணன், கந்த வேல், ஸ்ரேயா, சூர்யா மற்றும் ஸ்டிட்ச்வெல் நிறுவன மகளீர்கள், பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

