சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளியின் ஆண்டு விழா
![]()
சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளியின் ஆண்டு விழா
சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளியின் ஆண்டு விழாவானது வள்ளியப்பா ஆடிட்டோரியத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
சோனா கல்வி நிறுவனத்தின் தலைவர் திரு.சொ.வள்ளியப்பா தலைமையில் நடைபெற்ற விழாவிற்கு, தாளாளர் திருமதி .சீதா வள்ளியப்பா, துணைத்தலைவர்கள் சொக்கு வள்ளியப்பா ,தியாகு வள்ளியப்பா , திருமதி விசாலாட்சி சொக்கு , வள்ளி சொக்கு, வருண் சொக்கு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவின் சிறப்பு விருந்தினராக தோல் மற்றும் அழகியல் மருத்துவர் பாவை செந்தில் அவர்கள் மாணவர்களின் கல்வி மற்றும் கலைத்திறமைகளை வெளிப்படுத்திய விதம் குறித்து பாராட்டிப் பேசினார். மேலும் கல்வியில் சிறந்து விளங்கிய மாண மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார். விழாவில் பள்ளியின் இயக்குநர் டாக்டர் வீ. கார்த்திகேயன் , முதல்வர் திருமதி. இ.ஜெ.கவிதா, ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளான நடனம், நாடகம், தேசப்பற்றை வெளிப்படுத்தும் தனி நடிப்பு ஆகியன மாணவர்களின் பல்வேறு திறமைகளை வெளிக்கொணரும் விதமாக அமைந்திருந்தன .

