தெருமின் விளக்குகள் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்
![]()
நெமிலிச்சேரி-நடுகுத்தகை ஊராட்சிகளில் சி.டி.எச் சாலையின் மைய தடுப்புகளில் கீழ் ரூ.1.23 கோடி மதிப்பீட்டில் மின் கம்பங்கள் அமைத்து தெருமின் விளக்குகள் : அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார் :
திருவள்ளூர் மார்ச் 06 : திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் நகராட்சி பேருந்து நிறுத்தம் அருகில் ஊராட்சி பொது நிதி மற்றும் பெருநிறுவன சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு நிதி (சிஇஆர்) நிதி திட்டத்தின் கீழ் ரூ.1.23 கோடி மதிப்பீட்டில் நெமிலிச்சேரி-நடுகுத்தகை ஊராட்சிகளில் சி.டி.எச் சாலையின் மைய தடுப்புகளில் மின் கம்பங்கள் அமைத்து தெருமின் விளக்குகள் அமைத்து அதனை பொது மக்கள் பயன்பாட்டிற்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் தொடங்கி வைத்து பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
நெமிலிச்சேரி ஊராட்சி பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.21 இலட்சமும், நடுகுத்தகை ஊராட்சி பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.26 இலட்சமும், திருநின்றவூர் நகராட்சி பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.60 இலட்சமும், பெரு நிறுவன சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு நிதி (சிஇஆர்) நிதி திட்டத்தின் கீழ் ரூ.16.50 இலட்சமும் ஆக மொத்தம் ரூ.123.50 இலட்சம் மதிப்பீட்டில் 146 கம்பங்களும், 292 மின் விளக்குகளும் அமைக்கப்படவுள்ளது.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் இணை இயக்குநர் வை.ஜெயக்குமார், திருநின்றவூர் நகர்மன்ற தலைவர் உஷாராணிரவி, திருநின்றவூர் நகராட்சி ஆணையர் ஏ.ஜீவிதா, பூவிருந்தவல்லி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஷ்பாபு (வ.ஊ), அமிழ்தமன்னன் (கி.ஊ), ஆவடி வட்டாட்சியர் கண்ணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

