இலவச WIFI சேவை& திருநங்கையரின் அழகு நிலையம்

Loading

திருவள்ளூரில் அறிவியல் பூங்கா மற்றும் முதல்வர் படிப்பகம் ஆகிய இடங்களில் இலவச வைஃபை சேவை மற்றும் திருநங்கையரின் அழகு நிலையம் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தொடங்கி வைத்தார் :
திருவள்ளூர் மார்ச் 05 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அறிவியல் பூங்காவில் தனியார் இணையதள சேவை நிறுவனத்தின் பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதி திட்டத்தின் கீழ் அறிவியல் பூங்கா மற்றும் முதல்வர் படிப்பகம் ஆகிய இடங்களில் இலவச வைஃபை சேவையை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம், பூங்கா நகர் பகுதியில் தனியார் கார் தொழிற்சாலையின் பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதி திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் முதல் முறையாக அழகுக்கலை பயிற்சி பெற்ற திருநங்கையரின் அழகு நிலையத்தை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் திறந்து வைத்து பார்வையிட்டார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாநில அளவில் கலைத் திருவிழா வினாடி வினா மற்றும் மன்ற போட்டிகளில் மாநில அளவில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குநர் விஜயா, தனியார் இணையதள சேவை நிறுவன தமிழ்நாடு பிரிவு தலைவர் அஸ்வினிகுமார், சமூக பங்களிப்பு நிதி (சிஎஸ்ஆர்) பிரிவு தலைவர் கோகுல், மாவட்ட சமூக நல அலுவலர் சோ.வனிதா, தனியார் கார் தொழிற்சாலை நிறுவன பிரதிநிதிகள் மற்றும் திருநங்கையர்கள்,பள்ளி மாணவர்கள், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares