சோசலிசத் தந்தை ஆச்சார்யா நரேந்திர தேவாவின் 70-வது நினைவு நாள்

Loading

ஈரோடு
ஈரோட்டில் சோசலிசத் தந்தை ஆச்சார்யா நரேந்திர தேவாவின் 70-வது நினைவு நாள்: காங்கிரஸ் மற்றும் அனைத்துக் கட்சியினர் மலரஞ்சலி!
ஈரோடு, பிப். 19: இந்திய சோசலிச இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் ஆச்சார்யா நரேந்திர தேவா அவர்களின் 70-வது நினைவு நாள் இன்று ஈரோட்டில் உணர்வுப்பூர்வமாக அனுசரிக்கப்பட்டது. ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள காலிங்கராயன் ஓய்வு விடுதி வளாகத்தில் அமைந்துள்ள அவரது நினைவு இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு, ஈரோடு மாமன்ற உறுப்பினரும் முன்னாள் மாவட்டத் தலைவருமான ஈ.பி. ரவி தலைமை தாங்கினார். முன்னதாக, ஈரோடு மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி. ராஜேஷ் ராஜப்பா, ஆச்சார்யா நரேந்திர தேவாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் குணாதரன் (என்கிற சேவக்) மற்றும் முன்னாள் மாவட்டத் தலைவர் டி. திருச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் மண்டலத் தலைவர்கள் மாமரத்துபாளையம் எஸ்.கோபி, ஆர். விஜயபாஸ்கர், எச்.எம்.ஜாபர் சாதிக், மாவட்டத் துணைத் தலைவர்கள் கே. புனிதன், சி. பாஸ்கர்ராஜ், மாவட்டப் பொதுச் செயலாளர்கள் வி.கே. சச்சிதானந்தம், இரா. கனகராஜன், ஊடகப் பிரிவுத் தலைவர் ம. முகமது அர்சத், சிறுபான்மை துறை துணைத்தலைவர் கே.என். பாஷா, நெசவாளர் அணி தலைவர் சி. மாரிமுத்து மற்றும் நிர்வாகிகள் பெரியார் நகர் சூரஜ், சிந்தன் நகர் கிருஷ்ணமூர்த்தி, வாட்டர் சிவாஜி, எம்.ஆர். மாது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும், சர்வ கட்சியைச் சேர்ந்த டி. முருகானந்தம், டாக்டர் சிவமுருகன், பாஸ்கர், பன்னீர்செல்வம், தங்கராஜ், குணசேகரன், ராஜமாணிக்கம் ஆகியோருடன் தமிழ்நாடு தொழிலாளர் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் குளம் ராஜேந்திரன், தமிழக பசுமை இயக்கம் கே.ரவிச்சந்திரன் மற்றும் ஐ.என்.டி.யூ.சி ஜெகநாதன் ஆகியோரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலிக்குப் பிறகு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ஆச்சார்யா நரேந்திர தேவாவின் நினைவைப் போற்றும் வகையிலும், வருங்கால சந்ததியினர் அவரது சோசலிசக் கொள்கைகளை அறிந்து கொள்ளும் வகையிலும், இந்த நினைவு இல்லத்தின் அருகிலேயே விரைவில் ஒரு நவீன நூலகம் அமைப்பது என ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1920-ல் காந்தியின் அழைப்பை ஏற்று போராட்டத்தில் குதித்த நரேந்திர தேவா, 1934-ல் காங்கிரஸ் சோசலிஸ்ட் குழுவை உருவாக்கியவர். உடல்நலக் குறைவால் 1956 பிப்ரவரி 19 அன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அவர் காலமான இடத்திலேயே இன்று இந்த நினைவேந்தல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
0Shares