முதியவர்கள் வாக்களிப்பது அவசியம் விழிப்புணர்வு
![]()
பாக்கம் தனியார் தொண்டு நிறுவனத்தில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி :
திருவள்ளூர் பிப் 19 : திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம், பாக்கம் தனியார் தொண்டு நிறுவனத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் தலைமையில் நடைபெற்றது.
தனியார் தொண்டு நிறுவனத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 80 வயதைக் கடந்த முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 100-க்கும் மேற்பட்டவர்களிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் எளிதாக வாக்களிக்கும் வகையில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தும் விதத்தில் 100% வாக்கு பதிவை வலியுறுத்த மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டு, வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்கு அளிக்கும் விதம் குறித்து விளக்கப்பட்டது. முன்னதாக பள்ளி மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு குறித்த குறும்பாடல்களை பாடினர்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் இணை இயக்குநருமான வை.ஜெயக்குமார், வாக்காளர் பதிவு அலுவலரும் உதவி ஆணையருமான (கலால்) கணேசன், மாவட்ட சமூக நல அலுவலர் சோ.வனிதா, திருவள்ளூர் வட்டாட்சியர் பாலாஜி, திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பி.செல்வகுமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

