ஜேஇஇ 2026 தேர்வில்99.77 மதிப்பெண் பெற்று சாதனை

Loading

ஈரோடு
ஈரோடு ஆகாஷ் இன்ஸ்டிட்யூட் மாணவர்கள் ஜேஇஇ மெயின் 2026 தேர்வில் மின்னல் வேக சாதனை: 99.77 விழுக்காடு மதிப்பெண் பெற்று சஞ்சய் முதலிடம்!
ஈரோடு: தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள ஜேஇஇ மெயின் 2026 செஷன்-1 தேர்வு முடிவுகளில் ஈரோடு ஆகாஷ் இன்ஸ்டிட்யூட்  மாணவர்கள் அதிரடி சாதனை புரிந்துள்ளனர்.
இதில் மாணவர் சஞ்சய் 99.77 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து கல்வி நிறுவனத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார். குறிப்பாக இவர் இயற்பியல் மற்றும் கணித பாடங்களில் 99 விழுக்காடு பெற்று அசத்தியுள்ளார்.
அவரைத் தொடர்ந்து நிகில் சிவானந்தன் 98.46, ராகுல் 98.41, ஆராதனா விக்னேஷ் 98.05, அபிநவ் 98.01 மற்றும் அதியன் 96.53 என ஆறு மாணவர்கள் மிகச்சிறந்த விழுக்காடு மதிப்பெண்களைப் பெற்று ஈரோடு கிளையின் வலுவான கல்வித் திறனை வெளிப்படுத்தியுள்ளனர். மாணவர்களின் இந்த மகத்தான வெற்றி குறித்து ஆகாஷ் கல்வி நிறுவனத்தின் வணிகத் தலைவர் தீரஜ் குமார் மிஸ்ரா பாராட்டுத் தெரிவிக்கையில், மாணவர்களின் அர்ப்பணிப்பும் ஆசிரியர்களின் முறையான வழிகாட்டுதலுமே இந்த வெற்றிக்குக் காரணம் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
தகுதியான ஆசிரியர்கள், மாதிரி தேர்வுகள் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பாடத்திட்டங்கள் மூலம் தங்களது பலவீனங்களைக் கண்டறிந்து திருத்திக் கொண்டதே இந்த உயர்வுக்குக் காரணம் என மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இந்தியா முழுவதும் 415-க்கும் மேற்பட்ட மையங்களைக் கொண்டு செயல்படும் ஆகாஷ் நிறுவனம், இம்மாணவர்கள் ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்விலும் வெற்றி பெற்று ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.
இச்சாதனை ஈரோடு கல்வி வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
0Shares