கூட்டுவுவங்கியில் வாங்கிய வீட்டுக்கடன் அபராதவட்டி

Loading

கூட்டுவு வங்கியில் வாங்கியவீட்டுக்கடன், அபராத  வட்டிதள்ளுபடி செய்ய மனு
கூட்டுவு வங்கிகளில் வாங்கிய வீட்டுக்கடன், மற்றும் அபராத  வட்டியினை ஏழை எளிய மக்களுக்கு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை அமைப்பின் சார்பாக மனு அளிக்க பட்டது.
கோவை சிவாஜி காலனி பகுதியில் அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை செயல்பட்டு வருகின்றது. இந்த அமைப்பின் தலைவராக வழக்கறிஞர் புஸ்பாணந்தம் இருந்து வருகிறார் இவர்,கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமாரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார். இந்த மனுவில், கடந்த 15 வருடங்களுக்கு மேலாக, இலவச சட்ட ஆலோசனைகளை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றதாகவும், கோவை மாவட்டத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி  மற்றும் கோவை மாவட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் மூலம் பொதுமக்கள் வீடுகள் கட்ட,  கடன் பெற்றுள்ளனர் அவ்வாறு பெற்றுள்ள கடனை திரும்ப செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர் அவ்வாறு கஷ்ட படுகின்ற ஏழை எளிய மக்கள் வாங்கிய கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இத்தகைய கடன்தள்ளுபடி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என்றார். எனவே தமிழக அரசு, மத்திய கூட்டுறவு சங்கம் மற்றும் கோவை மாவட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில், வாங்கியுள்ள வீட்டு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மனு அளித்துள்ளதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0Shares