திருவள்ளூர் 5 வது புத்தகத் திருவிழாவில் சூப்பர் சிங்கர்

Loading

திருவள்ளூர் 5 வது புத்தகத் திருவிழாவில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பாடகர்கள் மற்றும் வாத்திய குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி :
திருவள்ளூர் பிப் 17 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக காலி மைதானத்தில் (வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில்) மாவட்ட நிர்வாகம், பொது நூலகத் துறை மற்றும் பபாசி இணைந்து நடத்தும் 5வது திருவள்ளூர் புத்தகத் திருவிழா-2026யில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பாடகர்கள் மற்றும் வாத்தியக்குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இப்பட்டிமன்றதை மாவட்ட வருவாய் அலுவலர் ச.சுரேஷ், இணை இயக்குநர் (வேளாண்மை) செல்வராஜ், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் என்.எம்.கனிமொழி, துணை ஆட்சியர் (பயிற்சி) சண்முக பீரித்தா, மாவட்ட நூலக அலுவலர் சரஸ்வதி மற்றும் திரளான பொதுமக்கள் ஆகியோர் பார்வையிட்டனர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக காலி மைதானத்தில் (வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில்) மாவட்ட நிர்வாகம், பொது நூலகத் துறை மற்றும் பபாசி இணைந்து நடத்தும் 5 வது திருவள்ளூர் புத்தகத் திருவிழா-2026யில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பாடகர்கள் மற்றும் வாத்தியக்குழுவினரை மாவட்ட வருவாய் அலுவலர் ச.சுரேஷ் நினைவு பரிசுகளை வழங்கி வரவேற்றார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக காலி மைதானத்தில் (வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில்) மாவட்ட நிர்வாகம், பொது நூலகத் துறை மற்றும் பபாசி இணைந்து நடத்தும் 5வது திருவள்ளூர் புத்தகத் திருவிழா-2026யினை திரளான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் புத்தக கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டனர்.
இதில் இணை இயக்குநர் (வேளாண்மை) செல்வராஜ், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் என்.எம்.கனிமொழி, துணை ஆட்சியர் (பயிற்சி) சண்முக பீரித்தா, மாவட்ட நூலக அலுவலர் சரஸ்வதி மற்றும் பல்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares