தேவேந்திரகுலவேளாளர்எஸ்சிபட்டியலில்இருந்துவிடுவி

Loading

கோவை
கோவை பந்தயசாலையில் உள்ள தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தேவேந்திர இலக்கிய மன்றம் சார்பாக எஸ்இ பட்டியல் வெளியேற்ற கோரிக்கை தொடர்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.. 
தேவேந்திர இலக்கிய மன்றம் அமைப்பின் சார்பில், தமிழக அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் கோவை பந்தய சாலையில் உள்ள தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு தேவேந்திர இலக்கிய மன்ற நிறுவனரும், முன்னாள் வணிகவரி துணை ஆணையருமான காசிமைந்தர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். தொடர்ந்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், மத்திய மாநில அரசுகள், தேவேந்திர குல வேளாளர்களை எஸ்.சி பட்டியலில் இருந்து விடுவித்து, எம்.பி.சி பட்டியலில் சேர்த்திட வேண்டுமெனவும், தற்பொழுது உள்ள எஸ்.சி பட்டியல் இட ஒதுக்கெட்டில் 18 சதவீதத்தில், ஆறு சதவீகித இட ஒதுக்கீட்டை, எம்.பி.சி பட்டியலில் சேர்த்து, அதில் தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களுக்கு உள் ஒதுக்கீடாக அமலாக்கிட அரசாணை பிறப்பித்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் இந்திய நாட்டின் பிரதமர், தமிழக முதல்வர், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி, தமிழ்நாடு அரசின் பட்டியல் பழங்குடியின நலத்துறை கூடுதல் செயலாளர், மற்றும் ஒன்றிய அரசின் எஸ்சி எஸ்டி நல ஆணையர், என பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளிடம், இது குறித்து மனுக்களாகவும், கோரிக்கைகளாகவும் வழங்கி உள்ளதாகவும், உடனடியாக மத்திய மாநில அரசுகள், சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கும் காலம் வரையிலும், உத்தேசமாக ஆறு சதவிகித இட ஒதுக்கீட்டை, எஸ்சி பட்டியலில் இருந்து நீக்கி, தேவேந்திர குல வேளாளர்களுக்கு எம்.பி.சி பட்டியலில் இணைத்து உள் ஒதுக்கீடாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர், இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் மாநில துணை தலைவரும், வழக்கறிஞருமான புஸ்பாணந்தம்,

பண்ணாடி அசோக், அந்தியூர் காமராஜ், வளரும் தமிழகம் கட்சி சந்திரன், செந்தில், லாரன்ஸ், வளரும் தமிழகம் கட்சி சுந்தர்ராஜ், வழக்கறிஞர் சிவக்குமார், செந்தில், பேரூர் ரத்தினம், ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, புலியகுளம் அறிவழகன், புலியகுளம் பிரபு, பாக்யலட்சுமி, ரேஷன் கடை கோபி, ஓய்வு பெற்ற இன்கம் டாக்ஸ் ஊழியர் ரமேஷ், பட்டக்காரர் தெய்வராசு, டாஸ்மாக் மணிமாறன், அரசு ஊழியர் சங்க தலைவர் ஆறுமுகம், சதாசிவம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0Shares