கருணாம்பிகை அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்  

Loading

கோவை
அருள்மிகு கற்கிமலை ஈஸ்வரர் உடனமர் கருணாம்பிகை அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் மகா அன்னதானம்
கோவை கணுவாய் அருள்மிகு கற்கிமலை ஈஸ்வரர் உடனமர் கருணாம்பிகை அம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. யாகசாலையில் ஆறு கால யாகங்கள் நடத்தி கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்த்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் மகா அன்னதானம் நடைபெற்றது.
கோவை கணுவாய் பகுதியில் அமைந்துள்ளது பழமையான அருள்மிகு கற்கிமலை ஈஸ்வரர் உடனமர் கருணாம்பிகை அம்மன் திருக்கோவில்
இக்கோவில் கோவில் புணரமைக்கப்பட்டு திருக்குட நன்னீராட்டு பெருவிழா 12 ஆண்டுகளுக்கு பிறகு விமர்சையாக நடைபெற்றது.  மஹா கணபதி ஹோமத்துடன் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நிகழ்ச்சி தொடங்கியது.
அருள்மிகு குன்று பெருமாள் கோவிலில் இருந்து முளைப்பாரி மற்றும் தீர்த்தக்குடம் அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து முதற்கால வேல்வி பூஜைகள் நடைபெற்றது.
இரண்டாம் கால வேள்வி, மூன்றாம் கால வேள்விகள் நடைபெற்றது. 108 மூலிகைகளைக் கொண்டு வேள்வி நடைபெற்றது. இதையடுத்து புனித நீர் கலசங்கள் கோவிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு. கோவில்  கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது. தொடர்ந்து கற்கிமலை ஈஸ்வரர் உடனமர் கருணாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
கோபுர கலசங்களுக்கு டிரோன் மூலம் பூக்கள் தூவப்பட்டது.  கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் டிரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சுற்று வட்டாரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் மகா அன்னதானம் வழங்கப்பட்டது.  இதற்கான ஏற்பாடுகளை அருள்மிகு கற்கிமலை ஈஸ்வரர் உடனமர் கருணாம்பிகை அம்மன் அறக்கட்டளை நிர்வாக குழு, திருப்பணிக்குழு மற்றும் ஊர்ப்பொதுமக்கள் செய்திருந்தனர்.
0Shares