வருவாய்சங்கங்களின்கூட்டமைப்பு மறியல் போராட்டம்

Loading

திருவள்ளூரில் வருவாய் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது :
திருவள்ளூர் பிப் 12 : கடந்த அக்டோபர் மாதம் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் தலைமையில் அரசு உயர் அலுவலர்களுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது உறுதி அளிக்கப்பட்டபடி கூட்டமைப்பின் ஒன்பது அம்ச கோரிக்கைகளை உடனடியாக அரசாணைகளாக வெளியிடக் கோரி மூன்று கட்ட போராட்டம் நடத்துவது என முடிவேடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் முதல் கட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வருவாய்துறை அனைத்து நிலை அலுவலர்களும் நில அளவை துறை அலுவலர்களும் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் ஆட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தின் போது சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும். பணியில் மரணம் அடையும் கிராம உதவியாளர்களின் வாரிசுகளுக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் உரிய பணியிடம் வழங்கிட வேண்டும். அனைத்து பணியிடங்களையும் நிரந்தர அடிப்படையில் நிரம்பிட வேண்டும். வருவாய்த் துறையின் அடிப்படைக் கட்டமைப்புகளை வரைபடுத்த வேண்டும் தமிழ்நாடு அமைச்சுப்பணி விதிகளில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலர்களின் கல்வித் தகுதியை நிர்ணயம் செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலர்களுடன் திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் தாமோதரன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தை கைவிட கோரிக்கை விடுத்தும் அவர்கள் ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் வருவாய்த்துறை அலுவலர்களை குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர். வருவாய்த்துறை அலுவலர்களில் இந்த சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தினால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
0Shares