என்ஊர்என்கனவுதிட்டம்தொடர்பானகலந்தாய்வுகூட்டம்
![]()
திருவள்ளூரில் “என் ஊர் என் கனவு” திட்டம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் : அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்பு :
திருவள்ளூர் பிப் 12 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் “என் ஊர் என் கனவு” திட்டம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமை தாங்கினார்.மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் திட்டம் தொடர்பாக திட்ட விளக்கவுரை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். அதனைத் தொடர்ந்து பேசிய திருவள்ளூர், பூவிருந்தவல்லி,திருத்தணி ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது சட்டமன்ற தொகுதிகளுக்கு ட்டப்பட்ட பகுதிகளில் “என் ஊர் என் கனவு” திட்டத்தில் தொலைநோக்கு திட்டங்கள் தொடர்பாக விரிவாக எடுத்துரைத்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பாக தமிழ்நாட்டினை வழிநடத்தி வருவதால் “என் ஊர் என் கனவு” என்ற திட்டத்தில் ஒவ்வொரு துறை வாரியாக தொலைநோக்கு பார்வையுடன் கருத்துருக்களை பெற்று அதனை ஒருங்கிணைத்து அதனை தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படும். ஒவ்வொரு துறையும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக சிறப்பான பல முன்னோடி திட்டம் கருத்துருக்களை வழங்க வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வேளாண்மை-உழவர் நலத்துறை, பள்ளி கல்வி துறை, கால்நடைப் பராமரிப்பு துறை, பொது சுகாதாரம் மற்றும் மருந்து நோய் தடுப்பு மருந்து துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, மீன்வளத்துறை, சுற்றுலாத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, போக்குவரத்து துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆகிய துறை சார்ந்த அலுவலர்கள் “என் ஊர் என் கனவு” திட்டத்தில் தங்களது கருத்துருக்களை எடுத்துரைத்தனர்.
மேலும் வியாபாரிகள் நலச்சங்கம், மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம், வேளாண்மை விவசாயிகள் சங்கம் ஆகிய சங்கங்களின் பிரதிநிதிகள் “என் ஊர் என் கனவு” திட்டத்தில் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இறுதியில் திருவள்ளுரில் வரும் 13.02.2026 முதல் 22.02.2026 வரை நடைப்பெறவுள்ள திருவள்ளூர் புத்தகக் கண்காட்சிக்கான இலட்சனையை அமைச்சர் வெளியிட்டார்.
இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.இராஜேந்திரன் (திருவள்ளூ ர்), ஆ.கிருஷ்ணசாமி (பூவிருந்தவல்லி), எஸ்.சந்திரன் (திருத்தணி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் இணை இயக்குநருமான வை.ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ச.சுரேஷ், ஆவடி மாநகராட்சி ஆணையர் ரா.சரண்யா,பொன்னேரி சார் ஆட்சியர் கு.ரவிகுமார், பயிற்சி ஆட்சியர் அப்துல் ரகீம், அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் மோகன் காந்தி மற்றும் பல்துறை சார்ந்த அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

