உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு9425மடிக்கணினி

Loading

உலகம் உங்கள் கையில்” உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் 9425 மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் : அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார் :
திருவள்ளூர் பிப் 12 : திருவள்ளுர் மாவட்டம் மற்றும் வட்டம், திருப்பாச்சூர் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டமான “உலகம் உங்கள் கையில்” உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில்  சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு 102 தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த 9425 மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி பேசினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில், முதற்கட்டமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு மொத்தம் 4308 மடிக்கணினிகள் 05.01.2026 அன்று வழங்கப்பட்டது. மற்றும் அதன் தொடர்ச்சியாக இறுதியாண்டிற்கு முந்தைய மாணவர்களுக்கு 4231 மடிக்கணினிகள் வழங்கப்பட்டது. ஆக மொத்தம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பயிலும் 31 தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் இறுதியாண்டு மாணவ மாணவியர்களுக்கு 4481 மடிக்கணினிகள் 27.01.2026 அன்று வழங்கப்பட்டது மற்றும் அதன் தொடர்ச்சியாக 102 தனியார் கல்வி நிறுவனங்கயில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு இன்று 9425 மடிக்கணினிகள் வழங்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 8539. தனியார் கல்வி நிறுவனம் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 18337. திருவள்ளூர் மாவட்டத்தில் ஆக மொத்தம்  26876 மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்குவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் என அமைச்சர் கூறினார்.
இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.இராஜேந்திரன்  (திருவள்ளூர்), ஆ.கிருஷ்ணசாமி (பூவிருந்தவல்லி),எஸ்.சந்திரன் (திருத்தணி), டி.ஜே.கோவிந்தராஜன் (கும்மிடிப்பூண்டி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் இணை இயக்குநருமான வை.ஜெயகுமார், திருவள்ளூர் நகர்மன்ற தலைவர் பா.உதயமலர் பாண்டியன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) யுவராஜ், உதவி இயக்குநர் (பயிற்சி) மோகன் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்லூரி பேராசிரியர்கள், திரளான மாணவ, மாணவியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares