தொகுதி மேம்பாட்டு நிதியில் பல்நோக்கு கட்டிடம்

Loading

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் தளபதியார் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதி கன்டோன்மென்ட் மஞ்சதளா பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 25.00 இலட்சம்  மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட மேல் கூரை அமைக்கப்பட்ட பல்நோக்கு கட்டிடத்தை  தமிழ்நாடு அரசு தலைமைக் கொறடா கா.ராமச்சந்திரன் அவர்கள் குத்துவிளக்கேற்றி வைத்து,பொதுமக்களின் பயன்பாட்டிற்கு  திறந்து வைத்தார் .
இந்நிகழ்ச்சியில் மெட்ராஸ் ரெஜிமென்ட் செண்டர் இராணுவ தளபதி மூத்த கள அதிகாரி  திரு. கிருஷ்ணேந்துதாஸ்,தலைமை நிர்வாக அதிகாரி Dr.வினோத் விக்னேஸ்வரன் CEO,நியமன உறுப்பினர்  ஷீபா,குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார்,முன்னாள் உறுப்பினர் மார்ட்டின்,மாவட்ட பிரதிநிதி மூர்த்தி,மஞ்சுதளா ஊர் தலைவர் சண்முகம், கன்டோன்மென்ட் ஊழியர்கள்,ஊர் பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
0Shares