வீட்டுமனை பட்டாஅமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்
![]()
காட்டுப்பாக்கத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்கள் : சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார் :
திருவள்ளூர் பிப் 10 : திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டம் காட்டுப்பாக்கம் எல்.சி.வி.கே.எஸ் உயர்நிலைப்பள்ளியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் பூவிருந்தவல்லி மற்றும் மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 305 பயனாளிகளுக்கும், திருவேற்காடு நகராட்சி தனியார் திருமண மண்டபத்தில் ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 77 பயனாளிகளுக்கும் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வீட்டுமனை பட்டாக்களை வழங்கி பேசினார்.
தமிழ்நாட்டில் 22 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது வரை 1.40 இலட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. இன்று ஆவடி, பூவிருந்தவல்லி மற்றும் மதுரவாயல் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 382 பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்கப்படுகிறது. ஆவடி, பூவிருந்தவல்லி மற்றும் மதுரவாயல் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அகரமேல் ,அடையாளம்பட்டு ,அயனம்பாக்கம், உடையவர்கோயில், கண்ணப்பாளையம், காட்டுப்பாக்கம், கொரட்டுர் , கோளப்பன்சேரி, சுந்தரசோழவரம், சென்னீர்குப்பம், சோராஞ்சேரி , திருவேற்காடு, நசரத்பேட்டை, பர்வதராஜபுரம், பாரிவாக்கம், பிடாரிதாங்கல், மேப்பூர், மேல்பாக்கம், வயலாநல்லுார் திருமணம், வயலாநல்லுார் , வயலாநல்லுார் காவல்சேரி, வீரராகவபுரம், செம்பரம்பாக்கம் (மேவளூர்குப்பம் ஆ) ஆகிய 23 கிராமங்களை சேர்ந்த 382 பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் விடியல் பயணம் திட்டம்,மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன், மக்களை தேடி மருத்துவம், நான் முதல்வன் போன்ற பல்வேறு மகாத்தன திட்டங்களை வழங்கி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி வருகிறார் என அமைச்சர் கூறினார்.
இதில் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி மாவட்ட வருவாய் அலுவலர் ச.சுரேஷ், திருவேற்காடு நகர்மன்ற தலைவர் என்.கே.மூர்த்தி, திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் சு.ரவிச்சந்திரன், திருவேற்காடு நகராட்சி ஆணையர் ராமர். பூவிருந்தவல்லி வட்டாட்சியர் உதயம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

