பொதுமக்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம்
![]()
கோவை
கோவை புலியகுளம் பகுதியில் அனைத்து சமூக மகள்களுக்கும் உதவும் பேரவை அமைப்பின் சார்பாக பொதுமக்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது இதில், 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்களை பரிசோதனை செய்தனர்.
கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கோவை சிவாஜி காலனி பகுதியில் இயங்கும், அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை, மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மாபெரும் கண் பரிசோதனை முகாம், கோவை புலியகுளம் பகுதியில் உள்ள புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை அமைப்பின் சார்பாக 26 வது முறையாக நடைபெறும் இந்த, இலவச கண் பரிசோதனை சிறப்பு முகாமில், பொதுமக்களுக்கு இலவசமாக கண்புரை நோய், நீர் அழுத்த நோய், மாலைக்கண் நோய், மாறுக்கண், சீல் நீர் வடிதல், துரப்பார்வை, ஆகியவற்றிற்கான பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டது. இந்த கண் பரிசோதனை முகாமில் பொதுமக்கள், இந்த பகுதியை சேர்ந்தவர்கள் என சுமார் 300க்கும் மேற்பட்டொர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டதுடன் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை, கோவை சிவாஜி காலனி பகுதியில் செயல்பட்டு வருகின்ற, அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை அமைப்பின் நிறுவன தலைவரும், சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான புஸ்பாணந்தம் செய்திருந்தார்.
இந்த கண் சிகிச்சை முகாமில், தோழர் மாணிக்கம், அனைத்து கிறித்துவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மைய நிறுவன தலைவர், ஸ்டீபன் ராஜ், புனித அந்தோனியார் ஆலயத்தின் உதவி பங்கு தந்தை கால் ராஜ், இந்திரன் இதழ் ஆசிரியர் உலகநாதன், லட்சுமி, திவ்யா, பால்ராஜ், வழக்கறிஞர் குமாஸ்தா ஜான், போத்தனூர் தெய்வானை, புவனேஸ்வரி, பாப்பாத்தி, சுபஸ்ரீ, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

