குன்னூர் பாஜக.தேசிய மகளிரணிநிர்வாகிகள் கூட்டம்
![]()
நீலகிரி மாவட்டம் குன்னூரில்
பாஜக.தேசிய மகளிரணி தலைவரும், குன்னூர் சட்டப் பேரவை தொகுதி பொறுப்பாளருமான,வானதி சீனிவாசன், மண்டல அளவிலான நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார்,
அப்போது அவர் செய்தியாளர்களிடம், கூறும் போது.
திமுவை வீழ்த்துவதற்கு தவேக மட்டுமல்ல. அனைத்து கட்சிகளை பாஜக அழைக்கும்.
அண்ணாமலைக்கும்,நயினார் நாகேந்திரனுக்கும் எந்த இடைவெளியும் இல்லை
அனைவரும் இணக்கமாகத்தான் உள்ளோம்.
தமிழக கொடுத்தவாக்குறுதிகளில் எதையுமே நிறைவேற்ற வில்லை,
தமிழக முதலமைச்சர் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக கற்பனை உலகத்தில் இருக்கிறார்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் கொலை கொள்ளை என்று தமிழகம் அழிவு பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
திமுகவை வீட்டிற்கு அனுப்புவதான் ஒரே கனவு.தேயிலை வாரியம் மத்திய அரசின் கையில் இருந்தாலும் அதனை பிராண்டிங் செய்யும் பணியை தமிழக முறையாக செய்யாததால் தேயிலைக்கு உரிய விலை கிடைப்பதில்லை.
முன்னதாக குன்னூர் தனியார் அரங்கம் முன்பு வானதி சீனிவாசனுக்கு ஆரத்தி எடுத்து பாஜக சார்பில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.

