கட்டபெட்டு அரசு உயர்நிலை பள்ளியில் ஆண்டு விழா

Loading

நீலகிரி
நீலகிரி மாவட்டம் கட்டபெட்டு அரசு உயர்நிலை பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் ஆசிரியர்  வசந்தகுமாரி வரவேற்புரை வழங்கினார். தலைமை உரையினை தலைமையாசிரியர்  விஜயகுமார் வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக சென்ட்ரல் வங்கி மேலாளர் கலைவாணன் கலந்து கொண்டு சிறப்புரை
யாற்றினார். சிறப்பாக பயின்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு கோப்பைகள், சான்றிதழ்கள் மற்றும் உதவி தொகைகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில்  பள்ளி மேலாண்மைகுழு தலைவர் கவிதா,  பெற்றோர் ஆசிரியர் கழகம் உமா,கட்டபெட்டு ஊர் தலைவர் ராஜூ,பள்ளி கௌரவ
தலைவர் அய்யாசாமி மற்றும் வார்டு உறுப்பினர்கள், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0Shares