வீட்டிற்கு தெரியாமல் 2- வது திருமணம்

Loading

திருவள்ளூர் அருகே வீட்டிற்கு தெரியாமல் 2- வது திருமணம் செய்த பெண்ணின் கணவர் நடத்தை சரியில்லாததால் பிரிந்து வாழ்ந்த நிலையில் தட்டிக் கேட்ட உறவுக்காரரின் நண்பரை கத்தியால் குத்தி கொலை :

திருவள்ளூர் பிப் 06 : திருவள்ளூர் அடுத்த பூங்காநகர் பகுதியைச் சேர்ந்தவர் இந்துமதி (34). இவருக்கு ராஜேந்திரபாபு என்பவருடன் திருமணமாகி 8 வருடமாக வாழ்ந்த நிலையில் கணவர் 20190-ல் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.  இவர்களுக்கு இத்திஷா (13), ஜெயவர்த்தினி (8) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.  காக்களூர் பகுதியில் உள்ள விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்  இந்நிலையில் இந்துமதியின் பெற்றோர் 2-வது திருமணம் செய்ய வரன் பார்த்துள்ளனர்.

இதனிடையே கடந்த 2021-ஆண் ஆண்டு 2-வதாக புட்லூர்  பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் (40) என்பவரை பார்த்துள்ளனர். ஆனால் நடத்தை சரியில்லாததால் திருமணம் செய்யாமல் விட்டுவிட்டதாக கூறப்படுகிறது.  ஆனால் இந்துமதி என்பவர் அசோக்குமாரை பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டு கடந்த 2 ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளார்.   இதனிடையே  கடந்த 6 மாதமாக அசோக்குமாரின் நடத்தை சரியில்லாததால் அவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார் இந்துமதி. இந்நிலையில் நேற்று மாலை குழந்தைகளை பள்ளியிலிருந்து இந்துமதி குழந்தைகளை அழைத்துச் சென்ற போது அங்கு வந்த அசோக்குமார் இந்துமதியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து இந்துமதி தனது அத்தை மகனான காக்களூர் பூந்தோட்ட நகரைச் சேர்ந்த சந்திரபோஸ் (41)  என்பவரிடம் தெரிவித்ததையடுத்து அவர் தனது நண்பனாக புதுச்சத்திரம் பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் நித்தியானந்தம் (38)ஆகியோர் நேற்று இரவு அசோக்குமார் குடியிருக்கும் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனையடுத்து பூங்கா நகர் அப்பாசாமி சாலையில் சந்திரபோஸ் மற்றும் அவரது நண்பர் நித்தியானந்தம் ஆகியோர் காரில் இரவு 11 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது அசோக்குமார் காரை வழிமடக்கி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இரண்டு பேரையும் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில் காயமடைந்த இருவரையும் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.  இதில் பலத்த காயம் அடைந்த நித்தியானந்தம் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.  மேலும் இந்துமதியின் அத்தை மகன் சந்திரபோஸ் படுகாயத்துடன் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.  இது குறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து அசோக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
0Shares