கிறித்துவதேவாலயங்களில்உபதேசியர்கள்நலவாரியம்

Loading

திருவள்ளூரில் கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களின் ஆய்வுக் கூட்டம் :
திருவள்ளூர் பிப் 06 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களின் ஆய்வுக் கூட்டம் கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய தலைவர் விஜிலா சத்தியானந்த்  தலைமையில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் முன்னிலையில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு  கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய தலைவர் விஜிலா சத்தியானந்த்  தலைமையில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் முன்னிலையில் 5 பயனாளிகளுக்கு நல வாரிய அட்டைகளை வழங்கினார்.
இதில் நல வாரிய துணைத்தலைவர் ஆர்.தயாநிதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் உஷா ராணி, நல வாரிய உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares