மாரியம்மன் திருக்குட நன்னீராட்டு பெருவிழா

Loading

கோவை
கே என் ஜி புதூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்
திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்தி பெருவிழா
முளைப்பாரி மற்றும் தீர்த்தக்குடம் அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது 
கோவை காசி நஞ்சேகவுண்டன் புதூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்தி பெருவிழாவின் ஒரு பகுதியாக சுப்பிரமணியம்பாளையம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் இருந்து முளைப்பாரி மற்றும் தீர்த்தக்குடம் அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மேள தாளங்கள் முழங்க, கிடாய், நடனக்குதிரை நடனத்துடன் தீர்த்தகுடம் மற்றும் முளைப்பாரி கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது.
கோவை காசி நஞ்சேகவுண்டன் புதூர் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில். இக்கோவிலில் விநாயகப் பெருமான், முருகப் பெருமான், ஆதிநாரயண பெருமாள், அபிராமி உடனமர் அமிர்தகடேஷ்வரர் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் அருள்பாளித்து வருகின்றன.
இந்நிலையில் கோவில் புணரமைக்கப்பட்டு திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்தி பெருவிழா வரும் 6ம் தேதி விமர்சையாக நடைபெறவுள்ளது. இதில் கடந்த ஞாயிறன்று மஹா கணபதி ஹோமத்துடன் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நிகழ்ச்சி தொடங்கியது.
திங்கட்கிழமை பஞ்சகவ்ய பூஜை, மூர்த்தி ஹோமம், சாந்திஹோமம், தீஆரதனை நடைபெற்றது. இதையடுத்து இன்று சுப்பிரமணியம்பாளையம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் இருந்து முளைப்பாரி மற்றும் தீர்த்தக்குடம் அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சுமார் 500 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் ஒரே மாதிரியான உடையணிந்து முளைபாரியை கைகளில் ஏந்தி ஊர்வலமாக வந்தனர். 10 க்கும் மேற்பட்ட தீர்த்தக்குடங்கள் சுப்பிரமணியம் பாளையம் மாரியம்மன் கோவிலை வலம் வந்து அங்கிருந்து காசி நஞ்சேகவுண்டன் புதூர் அருள்மிகு மாரியம்மன் கோவிலுக்கு புறப்பட்டது.
இந்த ஊர்வலம் மேள தாளங்கள் முழங்க, கிடாய்கள், நடனக்குதிரை நடனத்துடன் தீர்த்தகுடம் மற்றும் முளைப்பாரி கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது.
கோவிலை வந்தடைந்ததும் தீர்த்தக்குடங்களுக்கு பூஜைகள் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. மேலும் முளைபாரியைகளை வேள்வி வளாகத்தில் வைக்கப்பட்டது. தொடர்ந்து ஆயிரக்கணக்காணவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மாலை முதற்கால வேல்வி பூஜைகளும், புதன் கிழமை இரண்டாம் கால வேள்வி மற்றும் மூன்றாம் கால வேள்வி யாகங்களும் நடைபெறவுள்ளது. அதேபோல் வியாழன்று நான்காம் கால வேள்வி, ஐந்தாம் கால வேள்விகள் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை ஆறாம் கால வேள்வியை தொடர்ந்து ராஜ கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
0Shares