திருவள்ளூரில் குழந்தைகள் நலன்மற்றும் சிறப்புசேவை
![]()
திருவள்ளூரில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் துறைகளுடன் கூராய்வு கூட்டம் :
திருவள்ளூர் பிப் 02 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் துறைகளுடன் கூராய்வு கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் புதுக்கோட்டை விஜயா தலைமை தாங்கினார்.உறுப்பினர்கள் மோனா மட்டில்டா பாஸ்கர், வீ.உஷா நந்தினி, மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கல்வித்துறை, சமூக நலத்துறை, காவல் துறை, குழந்தைகள் நலக்குழு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், சைல்டு லைன் 1098, இளைஞர் நீதிக்குழுமம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வருவாய் துறை, உதவி இயக்குநர் – ஊராட்சிகள், நகராட்சி மற்றும் மாநகராட்சி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகிய துறைகளிலிருந்து முதல் நிலை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் குழந்தைகள் நலன் குறித்தும், வழக்குகள் குறித்தும், மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.சுரேஷ், மாவட்ட குழந்தை நல அலுவலர் நிஷாந்தினி துணை காவல் கண்காணிப்பாளர் அரிக்குமார் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

