ஈரோடு கொங்காலம்மன் கோவில் தேரோட்டம்
![]()
ஈரோடு
ஈரோடு கொங்காலம்மன் கோவில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
ஈரோட்டின் காவல் தெய்வமான அருள்மிகு கொங்காலம்மன் திருக்கோவில் தேரோட்டம் தைப்பூசத் திருநாளையொட்டி நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. தைப்பூச நன்னாளையொட்டி அதிகாலையிலேயே அம்மனுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளினார். இந்தத் தேரோட்டத்தில் ஆண்களும் பெண்களும் எனப் பெரும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்து தைப்பூச முருகனையும் அம்மனையும் மனமுருக வழிபட்டனர். இந்நிகழ்வில் கொங்காலம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சத்தியமூர்த்தி, உறுப்பினர்கள் குணசேகர், உமா தண்டபாணி, அய்யாவு, வெற்றிவேல் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் திலகவதி, சரக ஆய்வாளர் ஆதிரை உள்ளிட்ட அரசு அலுவலர்கள், அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர். கோவிலில் இருந்து புறப்பட்ட தேரானது பெரியார் மன்றம், பொன் வீதி மற்றும் நேதாஜி வீதி வழியாக வீதியுலா வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அறநிலையத்துறையினர் செய்திருந்தனர்.

