மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்
![]()
நீலகிரி
நீலகிரி மாவட்டம் உதகை ஒக்கலிகர் சங்க கல்யாண மண்டபத்தில், மாவட்ட நிர்வாகம், மாற்றுதிறனாளிகள் நலத்துறை, செஷயர் ஹோம்ஸ்,அரவிந்த் கண் மருத்துவமனை, பி.எஸ்.ஜி. மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை இனைந்து நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீருஅவர்கள்தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.
மேலும், மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது:
நீலகிரி மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் இலவச மருத்துவ முகாமானது, இன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு மருத்துவமனைகள் இணைந்து நடத்தும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.
0 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இதயத்தில் ஓட்டை அல்லது பிறவி இதய குறைபாடுகள் இருந்தால், அவர்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் மேல் சிகிச்சை வழங்கப்படும்.
பிறவியிலேயே கை, கால் அல்லது முதுகு தண்டுவடம் வளைந்து காணப்படுபவர்களுக்கு (1 மாதம் முதல் 18 வயது வரை) இலவச ஆலோசனை மற்றும் மருத்துவமனையில் இலவச அறுவை சிகிச்சை வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இம்முகாமில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தினேஷ் குமார், மருத்துவர்கள், செவிலியர்கள், ஏராளமான மாற்றுதிறனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

