இளைஞர்விளையாட்டுததிருவிழா இதுநம்ம ஆட்டம்2026
![]()
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம் அரண்வாயல் பகுதியிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா இது நம்ம ஆட்டம் 2026 ” 14 ஊராட்சி ஒன்றிய அளவிலான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் துவக்கி வைத்து விளையாட்டு வீரர்களை சந்தித்து வாழ்த்தி துவக்கி வைத்தார்.இதில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் அலுவலர் வி.சேதுராஜன், பல்வேறு விளையாட்டு பயிற்றுநர்கள், திரளான விளையாட்டு வீரர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

