AINEPA கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

Loading

 

கள்ளக்குறிச்சி மாவட்டம்

அனைத்து இந்திய பத்திரிக்கை ஆசிரியர் வெளியீட்டாளர் சங்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியிட்டார்கள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று மாநில தலைவர் லையன் எஸ். ராஜேந்திரன் அவர்களின் ஆணைப்படி நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் பி ஜோதி நரசிம்மன் தலைமை தாங்கினார். மாநிலத் துணைச் செயலாளர் இரமேஷ்பாபு, மாநில துணைத்தலைவர் பச்சையா பிள்ளை, மாநில துணை செயலாளர் முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹரிராஜன் வரவேற்றார். இந்தக் கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் புதிய தலைவராக ஜெயபால், கௌரவத் தலைவர் தர்மலிங்கம், மாவட்ட செயலாளர் ஸ்ரீ பாலாஜி , மாவட்ட பொருளாளர் வீரக்குமார், மாவட்டத் துணைத் தலைவர்கள் கவியரசன், குமரவேல், மாவட்டத் துணைச் செயலாளர் பிரகாஷ், மாவட்ட சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் முருகன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பாஸ்கர், வெங்கடேசன், அபுதாகிர், சுபாஷ் சந்திரபோஸ், குமார், சுரேஷ், திருமலை, உதயகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்தக் கூட்டத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு தனி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் மற்ற மாவட்டங்களில் உள்ளது போல் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். மாவட்ட மற்றும் வட்டார அளவில் அனைத்து செய்தியாளர்களும் தமிழ்நாடு அரசின் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்க்க உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வட்டார செய்தியாளர்களுக்கும் ஆட்சியர் அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து செய்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

0Shares