லஞ்சஒழிப்பு ஆய்வாளர் தமிழரசி கார்மீது மோதியலாரி
![]()
திருவள்ளூர்
திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் தமிழரசி கார் மீது எம் சாண்ட் ஏற்றிச்சென்ற டாராஸ் லாரி மோதி விபத்து : சிறு காயங்களுடன் உயிர் தப்பினார் :
திருவள்ளூர் ஜன 05 : திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளராக இருப்பவர் தமிழரசி. அலுவல் காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சென்னை திருப்பதி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். திருவள்ளூர் நகராட்சி அலுவலகம் அருகே திருவள்ளூர் நகராட்சி அருகே எம் சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த டாரஸ் லாரி லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் தமிழரசி காரின் வலது புறத்தில் இடித்ததில் காரின் வலது பக்க வாட்டில் சேதமடைந்து கார் சாலையில் தடுப்பு சுவரில் மோதியது.
இதில் காரின் வலது பக்கம் சேதமடைந்த நிலையில் சிறு காயங்களுடன் ஆய்வாளர் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருவள்ளூர் டவுன் போலீசார் எம் சாண்ட் மணல் ஏற்றி சென்ற டாரஸ் லாரியை பறிமுதல் செய்து, விபத்துக்குள்ளான காரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் காயமடைந்த ஆய்வாளர் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் சிகிச்சை எடுத்துக் கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது. லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் கார் மீது டாராஸ் லாரி இடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

