புதுச்சேரிஉப்பளம்தொகுதியில்சாலைஅமைக்கும் பணி

Loading

புதுச்சேரி ஜன-4 
புதுச்சேரி உப்பளம் தொகுதியில் சாலை மற்றும் சாலவம் அமைக்கும் பணி எம்எல்ஏ அனிபால் கென்னடி ஆய்வு 
புதுச்சேரி,
உப்பளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாணரப்பேட்டை தமிழ்த்தாய் நகரில், வாய்க்கால் மற்றும் சாலை அமைக்கும் பணிகள் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளை உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
அப்பகுதியில் நீண்ட காலமாக நிலவி வந்த அடிப்படை வசதிகளின் குறைபாடுகளை கருத்தில் கொண்டு, முதற்கட்டமாக குடிநீர் வசதி , வாய்க்கால் மற்றும் சாலைகள் சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக தமிழ்த்தாய் நகரில் மீதமுள்ள வீதிகளில் வாய்க்கால் மற்றும் சாலை அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நடைபெற்று வரும் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், விரைவில் 100 மீட்டர் அளவு மட்டும் உள்ள கம்பன் வீதிகளிலும் சாலை அமைத்து வழங்கப்படும் என்றும், அப்பகுதியில் உள்ள குளம் தூர்வாரப்பட்டு சீரமைக்கப்படும் என்றும் பொதுமக்களிடம் அவர் உறுதியளித்தார்.
இந்த ஆய்வின் போது, தொகுதி செயலாளர் சக்திவேல், கிளை செயலாளர்கள் காந்தி, செல்வம், ராகேஷ், கழக சகோதரர்கள் மோரிஸ், அருள், ரகுமான் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
0Shares