மு.பிரதாப் செய்தியாளர்களுடன் சுற்றுப்பயணம்

Loading

பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் செய்தியாளர்களுடன் சுற்றுப்பயணம் :
திருவள்ளூர் ஜன 02 : திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஊராட்சி ஒன்றியம், அம்மம்பாக்கம் ஊராட்சி, சீத்தஞ்சேரி கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.7.29 இலட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகளை பராமரித்து வளர்க்கும் பணிகள் மற்றும் ஊராட்சி துறை சார்பில் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் இணை இயக்குநருமான வை.ஜெயகுமார் முன்னிலையில் செய்தியாளர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்வையிட்டு, பணிகள் தொடர்பாக விவரித்து பேசினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பாக பல்வேறு திட்டங்கள் அனைத்து ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்களிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று மாவட்ட பத்திரிகையாளர்களை அழைத்துக் கொண்டு ஊரக வளர்ச்சி துறை சார்ந்த சில பணிகளை நாம் கள ஆய்வு மேற்கொண்டோம்.
பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.16.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிட பணிகள்,ரூ.29.93 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற கட்டிட பணிகள்,கிராம சேவை மைய கட்டிடம், பஞ்சாயத்து அலுவலகம், நர்சரி.அம்மம்பாக்கம் நர்சரி உள்ளிட்ட பல்வேறு பசுமை தொடர்பான பணிகள், கட்டிட பணிகள், பல்வேறு திட்டப்பணிகளை மாவட்ட கலாய்வு செய்தோம் என கூறினார்.மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் பல்வேறு பணிகள் தொடர்பாக விவரித்தார்.
இதில் ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் தணிகாச்சலம், உதவி செயற்பொறியாளர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பத்திரிகையாளர்கள், ஊடகத்துறையினர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares