திருவள்ளூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் : திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினரும் தலைவருமான (திஷா) எஸ்.சசிகாந்த் செந்தில் பங்கேற்பு :
திருவள்ளூர் டிச 31 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள, ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினரும் தலைவருமான (திஷா) எஸ்.சசிகாந்த் செந்தில் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியரும் உறுப்பினர் செயலருமான (திஷா) மு.பிரதாப், சட்டமன்ற உறுப்பினர்கள் (திஷா) ஆ.கிருஷ்ணசாமி (பூவிருந்தவல்லி), டி.ஜே.கோவிந்தராஜன் (கும்மிடிப்பூண்டி), துரை சந்திரசேகர் (பொன்னேரி), ஆவடி மாநகராட்சி ஆணையர் ரா.சரண்யா, பொன்னேரி சார் ஆட்சியர் கு.ரவிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வேளாண்மை துறை சார்பில் பிரதம மந்திரி நுண்ணுயிர் பாசன திட்டம் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டம், மண்வள அட்டை திட்டம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை, தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாய தொழில்நுட்ப மேலாண்மை முகமை, பாரம்பரிய அங்கக வேளாண்மை திட்டம் சூரிய சக்தியாக இயங்கும் பம்பு செட்டுகள், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் தேசிய சுகாதாரத் திட்டம், சமூக நலத்துறை சார்பில் மதிய உணவு திட்டம், ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், தாட்கோ திட்டம் சார்பில் பயனாளிகளின் வாழ்வாதாரம் மேம்படுவதற்கு தொழில் தொடங்குவதற்கான வங்கி கடன் உதவிகள் வழங்குவது குறித்தும் ஆகிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.அப்பொழுது திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியதாவது :
திஷா ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் மற்றும் திட்டங்கள் தொடர்பாக துறை சார்ந்த அரசு உயர் அலுவலர்களிடம் கேட்டறிந்தனர். மாவட்டத்திற்கு தேவையான அனைத்துவித அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும், சுகாதாரம், கல்வி போன்றவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நீண்ட நாள் கோரிக்கைகளான பல்வேறு இரயில்வே மேம்பாலம் பணிகளும், பிரதான சாலை பணிகளும் நிறைவடையும் தருவாயில் உள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரிகளில் கழிவுநீர் கலக்காத வகையில் பைப் லைன் கொண்டு பணிகள் மேற்கொண்டு கழிவுநீர் வெளியேற்றும் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். குடிநீர் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை தேர்வாய் கண்டிகை, காட்டூர்ஏரி, நேமம் போன்ற பல்வேறு திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று கூறினார்.இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.சுரேஷ், மாவட்ட வன அலுவலர் சுப்பையா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் இணை இயக்குநருமான வை.ஜெயகுமார், திஷா குழுவின் இதர உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.