கண்ணுறங்க மடி கொடுத்த நன்றி உள்ள நாய்

Loading

ஒட்டன்சத்திரத்தில் 
ஆதரவற்ற மூதாட்டி கண்ணுறங்க மடி கொடுத்த
தாயுள்ளம்கொண்ட நன்றி உள்ள நாய்
—-
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகர் பகுதியில் 20 வருடங்களுக்கு மேலாக பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டு அன்பையும் ஆருதலையும் தேடி அலைந்துவந்த
(70) வயதை கடந்த  காளியம்மாள் என்ற மூதாட்டியை இப்பகுதில் வசிக்கும் எவரும் அறியாதவர் இருக்க இயலாது.
சமூக ஆர்வலராக ஒட்டன்சத்திரம் நகர் பகுதியில் பயணித்தபோது நம்மை நெகிழ்விக்கும் நிகழ்வுகள் கண்களை ஈரமாக்கியது.
 அதில் சிலவற்றை இங்கு பதிவு செய்கிறேன்.
இப்பகுதியில் எத்தனையோ ஆதரவற்ற, மனநலம் பாதிக்கப்பட்ட, மனிதர்கள்
வயிற்றுபசியாற சாலையில் செல்பவர்களிடமும் சாலையோர வணிக வளாகங்களிலும் கையேந்தி யாசகம் கேட்கும் மனிதர்களை நாம் பார்த்திருக்கிறோம்.
அது அன்றாடம் நடப்பவை தான்.
ஆனால் இந்த மூதாட்டி எவரிடமும் பணம் கேட்டு கையேந்துவதில்லை வயிறு பசிக்கு சோறு கேட்பதில்லை என்பது நம்மை மிகவும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது.
மேலும் கருணை உள்ளத்தோடு யார் சென்று மூதாட்டியிடம்  உணவோ, காசோ, பணமோ எதைக்கொடுத்தாலும் அதை வாங்க மறுத்து விடுவது நம்மை வியப்படையச் செய்கிறது.
 ஆனால் இந்த மூதாட்டி அன்றாடும் பார்க்கக்கூடிய மனிதர்களில் நெறியுள்ள மனிதர் யார் என்பதை ஆய்வு செய்து வைத்துக் கொண்டு அவர்களிடம் மட்டுமே உரிமையோடு பணம் கேட்டு வாங்குவது நம்மை சற்று சிந்திக்க செய்கிறது.
 பணம்தானே யார் கொடுத்தால் என்ன என்ற நிலை உலகில் பரவி உள்ளபோது இந்த மூதாட்டி அதில் முற்றிலும் மாறுபட்டு இருக்கிறார்.
இங்கு நாட்டை ஆளும் அளவிற்கு செல்வம் படைத்தவராக இருந்தாலும் மூதாட்டியின் முன் செல்வம் வெறும் சாம்பல் என்ற வாழ்வியல் சித்தாந்தத்தை கற்றுக்கொண்டு செல்வார்கள் என்பதற்கு மாற்றுக்கருத்து இல்லை.
பெற்ற தாயை தாயுள்ளத்தோடு
தாங்கமல் வீதியில் விட்டு விட்டதால் இந்த மூதாட்டி ஒட்டன்சத்திரம் வாழும் நல்லுள்ளங்கள் நெறி, அன்பு, கருணை,உள்ளம் கொண்ட அத்தனை மனிதர்களும் இந்த மூதாட்டியை தன் தாய்போல் பார்த்துக்கொண்டு கேட்காமலே உபசரித்து உணவளிக்கும் அத்தனை மனிதர்களும் நல்லவர்கள் என்பதற்கான சான்று.
மேலும் மூதாட்டிக்கு மக்கள் கொடுக்கும் உணவை தான் மட்டும் உண்ணாமல் அன்பாகவும் , அறனாகவும் இருக்கும் இந்த மூதாட்டி செல்லும் வழியில் அத்தனை நாய்களுக்கும் உணவளித்து விட்டுதான் இந்த மூதாட்டி உண்ணுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்.
இந்த மூதாட்டி காளியம்மாள்  உறங்கும் இடங்களில் நாணயங்கள் கிடந்தால்  அதை எடுத்து பத்திரப்படுத்தி தன் கந்தல் துணியில் முடித்து வைத்திருப்பார்.
நல்லவராக இருக்கும் ஒருவர் அருகில் சென்று எனக்கு காசு கொடு காளியம்மா என்று கேட்டால் அந்த முந்தானை ஓரத்தில் முடித்து வைத்த முடிச்சை அவிழ்த்து அதில் வைத்திருக்கும் அத்தனை சில்லறை நாணயங்களையும் அவரிடம் கொடுத்து வீட்டுக்கு கொண்டு போ என்று சொல்லும் அந்த வார்த்தை ஏதோ தெய்வவாக்காக நமக்கு தோன்றும் அப்போது நம்மை கதறி  அலறச்செய்துவிடும் அப்படியாக இந்த காளியம்மாள் என்ற மூதாட்டியை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தருணங்களில் நாம் பார்க்கும் போது தீர்க்கதரிசி கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது பெற்றவள் உடல் சலித்தாள் பேதை நான் கால் சலித்தேன் படைத்தவன்
கை சலித்து ஓய்ந்தானம்மா மீண்டும் பாவி ஒரு தாய் வயிற்றில் பிறவேனம்மா  என்றும் இதுதான் நீதி என்றால் இறைவன் வேண்டுமா? என்ற வலி மிகுந்த இந்த வரிகள் ரணம் மிகுந்த இதயத்திற்கு மருந்தாகிறது எனவே பணம் தேவை தான் ஆனால் பணம் மட்டுமே தேவை அல்ல என்பதை உணர்ந்து பணத்திற்காக பெற்றோர்கள் காலங்களை  விரயமாக்குவதை தவிர்த்து குழந்தைகளுக்காக சற்று காலத்தை செலவிடுங்கள் அப்போதுதான் வளரும் இளைய  தலைமுறையினர்  பெற்றோர்களை பேணி காக்கும் அறம், நெறி அறிந்து கொள்வார்கள்  பெற்றோர்களை தவிக்க விடமாட்டார்கள் என்று பதிவு செய்தும், இந்தப் புகைப்படக் காட்சியில் நாம் எதை உணர முடியுமோ அதை உணர்ந்து கொள்வோம் என்று எழுதி முடிக்க மனம் இல்லாமல் தொடங்கிய இடத்தில் நின்று தாய் உள்ளத்தை காக்கும் தார்மீக
பொறுப்ஏற்கிறேன்..‌.
நன்றியுள்ள நாயாக .
ஒட்டன்சத்திரம் சமூகஆர்வலர்
ப.உதயன்
0Shares