ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சிவளர்ச்சி திட்ட பணிகள்
![]()
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் வளர்ச்சி திட்ட பணிகள் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு :
திருவள்ளூர் டிச 26 : திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஊராட்சி ஒன்றியம் வடக்குநல்லூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் துணை சுகாதார நிலையம் கட்டுமான பணிகளையும், பி.எம்.ஜென்மன் திட்டத்தின் கீழ் ரூ.3.41 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 67 வீடுகளின் கட்டுமான பணிகளையும் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு கட்டுமான பணிகளை விரைந்து முடித்து பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உத்திரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து, ஒரக்காடு ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் பி.எம்.ஜென்மன் திட்டத்தின் கீழ் ரூ.2.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 57 வீடுகளின் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு கட்டுமான பணிகளை விரைந்து முடித்து பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உத்திரவிட்டார்.
இதில் ஊரக வளர்ச்சித் துறை உதவி செயற்பொறியாளர் மாரீஸ்வரன், உதவி பொறியாளர் யாஸ்மின், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தினி காளியம்மாள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

