மக்களுக்கு உணவு வழங்கிய அனிபால்கென்னடி MLA
![]()
புதுச்சேரி டிச-01
புதுச்சேரி உப்பளம் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கிய அனிபால் கென்னடி எம்எல்ஏ
புதுச்சேரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி, பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையை முன்னிட்டு, புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட வம்பாகீரபாளையம், திப்புராயபேட்டை, சோனாம்பாளையம் , கனிபாய் தோட்டம், நேதாஜி நகர் 2 சூளைமேடு, உடையார் தோட்டம், ஆட்டுபட்டி, ரோடியர்பேட், வாணரப்பேட்டை, ராசு உடையார் தோட்டம், பிரான்சுவா தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இன்று திமுக உப்பளம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் உணவு வழங்கினார்.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாக உணவு மற்றும் அவசர தேவைகள் வழங்கப்பட்டதுடன், நிலைமையை ஆராய்ந்து தேவையான கூடுதல் உதவிகளை அதிகாரிகள் மூலம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என MLA அனிபால் கென்னடி அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தொகுதி செயலாளர் சக்திவேல், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளை செயலாளர்கள் மாயவன், ராகேஷ், விசிக மூர்த்தி, கழக சகோதரர்கள் செந்தில், விஷ்ணு, மோரிஸ், ரகுமான், ஜீவா, பவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

