தனியார் உணவக அரங்கில், ஜிஎஸ்டியின் பயணம்
![]()
கோவை
கோவையில் இந்திய வரி செலுத்துவோர் அமைப்பு மற்றும் ஃபிக்கி அமைப்புகள் சார்பில் ‘ஜி.எஸ்.டி.யின் பயணம் மற்றும் அடுத்த கட்டம்’ எனும் சிறப்பு கருத்தரங்க நிகழ்ச்சி கோவை நீலாம்பூர் பகுதியில் நடைபெற்றது.
இந்தியாவில் உள்ள வரி செலுத்துவோர் சங்கமான இந்திய வரி செலுத்துவோர் அமைப்பு மற்றும் பிக்கி ஆகியவை, இணைந்து கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில், ஜிஎஸ்டியின் பயணம், 2017 முதல் 2025 வரை மற்றும் அதன் அடுத்த கட்டம்’ என்ற தலைப்பில் ஒரு சிறப்பு கருத்தரங்கை நடத்தியது.
2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி அன்று ஜிஎஸ்டி என்றழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டதைக் குறிக்கும் வகையிலும், கடந்த எட்டு ஆண்டுகளில் ஜிஎஸ்டி அமலாக்கம் எவ்வாறு இருந்தது என்பதை விரைவாக ஆய்வு செய்யவும், அத்துடன் தொழில் துறைகளுக்கு ஒரு சிறந்த ஜிஎஸ்டி வரிச் சூழலை உருவாக்குவது எப்படி என்று எதிர்காலத்தை நோக்கிய திட்டங்களைப் பற்றி அறியவும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இன்றுவரை, கடந்த 8 ஆண்டுகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.அரசாங்கம் மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து, அதற்கேற்ப மாற்றங்களைச் செயல்படுத்தியதாலேயே இந்த மாற்றங்கள் சாத்தியமாயின.
இந்த மாற்றங்கள் மக்கள் மற்றும் அரசாங்கத்தின் இலக்குகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் அமைந்ததாக விழாவின் வாயிலாக தெரிவிக்கப்பட்டது. இதில் இந்திய வரி செலுத்துவோர் அமைப்பின் தலைவர் ஆர். சாந்தகுமார் வரவேற்புரை வழங்கினார். மேலும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஒன்பது புகழ்பெற்ற வல்லுநர்கள் இந்த நிகழ்வின் மையக்கருத்து குறித்துப் பேசினர். இதில்,
வங்கிகள் சார்பாக சிட்டி யூனியன் வங்கியின் பொது மேலாளர் சுப்பிரமணியன், பொறியியல் துறையில் கிராஃப்ட்ஸ்மேன் ஆட்டோமேஷன் லிமிடெட் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் கௌதம் ராம், அரசாங்கத்தின் சார்பாக மத்திய ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் உதவி ஆணையர் ஆர்.மணிமோகன்; சுகாதாரத் துறையில் ஷீலா மற்றும் பெத்தேல் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ராஜபாண்டியன், விருந்தோம்பல் துறையில் லீ மெரிடியன் ஹோட்டலின் நிர்வாக இயக்குநர் சென்னிமலை, நகைத்துறையில் எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் இருதியாக இந்திய வரி செலுத்துவோர் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் மிதுன் ராம்தாஸ் நன்றி உரை வழங்கி விழாவினை நிறைவு செய்தார்.

