சர்க்கரைநோய் துல்லியமாக கண்டறியும் பரிசோதனை
![]()
கோவை
கோவை சாய்பாபா காலனி பகுதியில், ஏ.ஜிஸ்.ஹெல்த்கேர் மையத்தில், சர்க்கரை நோய் பாதிப்புள்ளதா என்பதை துல்லியமாக கண்டறியும் நவீன பரிசோதனையை பணிசெல்லும் இளைஞர்களுக்கு இலவசமாக வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளதாக மருத்துவர் ஆதித்யன் குகன் தெரிவித்துள்ளார்.
கோவை நகரின் முதல் பிரத்யேகமான மற்றும் விரிவான மாஸ்டர் ஹெல்த் செக்கப் மையமான ஏ.ஜிஎஸ்.ஹெல்த்கேர் மற்றும் மாஸ்டர் ஹெல்த் செக்கப் சென்டர், 2025 உலக சர்க்கரை நோய் மாதத்தை முன்னிட்டு பணிசெல்லும் இளைஞர்களுக்கு தங்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளதா அல்லது அது ஏற்படும் வாய்ப்பு உள்ளதா என்பதை துல்லியமாக கண்டறியும் நவீன பரிசோதனையை 1 வாரத்திற்கு இலவசமாக வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
இது குறித்த செய்தியாளர் சந்திப்பு எஜிஎஸ் ஹெல்த் கேர் மையத்தில் நடைபெற்றது. அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய, ஏ.ஜிஸ்.ஹெல்த்கேர் மையத்தின் இயக்குனர் டாக்டர் ஆதித்யன் குகன் கூறியதாவது.. இந்தியாவிலேயே முதல் முறையாக, அலுவலகம் செல்லும் 25வயது முதல் 45 வரையிலான வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு ஒரு வார காலம் இலவசமாக ஹெச்.பி.ஏ.1.சி எனும், பரிசோதனை மற்றும் சர்க்கரை நோய் நிபுணரின் ஆலோசனையை வழங்க முடிவு செய்துள்ளதாகவும், எங்களின் இந்த நிகழ்வு பெல்ஜியத்தில் உள்ள சர்வதேச நீரிழிவு அறக்கட்டளையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றார். ஒரு நபருக்கு சர்க்கரை நோய் உள்ளதா என்பதை கண்டறிய வழக்கமாக செய்யப்படும் ஆர்.பி.எஸ். என்றழைக்கப்படும் ரேண்டம் பிளட் டெஸ்ட் முடிவுகள் ஒருவரின் உணவு, தூக்க முறை போன்ற காரணங்களால் நாளுக்கு நாள் மாறுபடலாம்.
ஆனால் ஹெச்.பி.ஏ.1.சி எனப்படும் நவீன பரிசோதனை உலக அளவில், சர்க்கரை நோயைக் கண்டறிவதில் சிறந்தது என பெயர்பெற்றுள்ளது.இந்த மேம்பட்ட பரிசோதனை முறை மூலம் ஒருவரின் 3 முதல் 6 மாத சராசரி இரத்த சர்க்கரை அளவை கொண்டு முடிவுகள் துல்லியமாக வழங்க முடியும். இது சர்க்கரை நோய் இருக்கிறதா என்பதையும் சர்க்கரை நோயின் வருவதற்கான ஆரம்ப நிலையை கண்டறிவதற்கும், நிர்வகிப்பதற்கும் ஒரு முக்கிய கருவியாக உள்ளது.
இந்த பரிசோதனை இன்றைய பணிசெல்லும் இளைஞர்களுக்கு முக்கியமானது என தெரிவித்துடன், இவர்களின் உடல் நலன் கருதி ஏ.ஜிஸ்.ஹெல்த்கேர் இந்த ஆண்டு உலக சர்க்கரை நோய் தினத்தின் கருப்பொருளான ‘நீரிழிவும் பணியிடமும்’ என்பதற்கேற்ப, இந்தியாவிலேயே முதல் முறையாக, ரூ.1100 மதிப்புள்ள இந்த ஹெச்.பி.ஏ.1.சி எனும் முக்கியமான பரிசோதனையை, 25முதல்-45 வயதுக்குட்பட்ட பணிசெல்லும் இளைஞர்களுக்கு இலவசமாக வழங்குகிறது என்றார்,

