குழந்தைகளுக்கான2ஆம் ஆண்டு மெகாஓவியப்போட்டி
![]()
சேலம்
வர்ணங்கள் ஆயிரம் குழந்தைகளுக்கான 2 ஆம் ஆண்டு மெகா ஓவியப்போட்டி!
சேலம் குகை திருச்சி மெயின் ரோட்டில் உள்ள பார்பி குயின் உணவகத்தில்
வர்ணங்கள் ஆயிரம் குழந்தைகளுக்கான மெகா ஓவியப்போட்டி
2 ஆம் ஆண்டு நடைபெற்றது.
இப்போ போட்டியினை பார்பி குயின் இயக்குனர்
நவாப் நவ்ஷாத் துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக மனநல மருத்துவர் வேல்பாரி கலந்து கொண்டார்.
மேலும் இதில் பொதுமேலாளர் முகமது உமர் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
2 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கான வரைபடங்களுக்கு வர்ணம் தீட்டுதல் பண்டிகை கொண்டாட்டங்கள் தொலைநோக்குப் பார்வை உள்ளிட்ட தலைப்புகளில் போட்டி நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற வர்களுக்கு முதல் பரிசு 3 நபர்களுக்கு மிதிவண்டி, இரண்டாம் பரிசாக மூன்று நபர்களுக்கு மிக்சி, மூன்றாம் பரிசாக மூன்று நபர்களுக்கு பிரஷர் குக்கர்,பரிசுகளாக வழங்கப்பட்டது.
கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பாராட்டு சான்றிதழ் ஆறுதல் பரிசு மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.

