உடற்கல்விஇயக்குனர்சங்கத்தி ன்கண்டனஆர்ப்பாட்டம்
![]()
சேலம்
உடற்கல்வி இயக்குனர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
சேலம் கோட்டை மைதானத்தில், சேலம் ஈரோடு நாமக்கல் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் சங்கம் சார்பில், மண்டல அளவிலான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், மருத்துவத்துறையில் உள்ளது போல் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும்.
ஒழுக்கம் சார்ந்த பணிகளில் உடற்கல்வி ஆசிரியர்களை மட்டுமே பெரும்பாலும் ஈடுபடுத்தப்படுவதால், நெறி பிறழ் மாணவர்களின் பகைமைக்கு நாங்கள் ஆளாகி தாக்குதலுக்கு உள்ளாக நேரிடுகிறது. ஆகவே காலை, உணவு இடைவேளை, மாலை நேரத்தில் மாணவர்களை அனுப்புதல் போன்ற ஒழுக்க செயல்பாடுகளை அனைத்து ஆசிரியர்களும் பார்க்கும் வகையில் சுழற்சி முறையில் பணிகளை வழங்கினால் நெறிபிறழ் மாணவர்களை கட்டுபடுத்த முடியும். அனைத்து, ஆசிரியர்களும் மன உளைச்சல் இன்றி பணியாற்றும் சூழலை உருவாக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்புச் சட்டம் இயற்றிட வேண்டும் என்பனவற்றை வலியுறுத்தி, சேலம் கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. இதில் மாநில செயளாலர் இளங்கோ வறவேற்புரையாற்றினார். மாநில தலைவர் தேவிசெல்வம் தலைமை தாங்கினார். கூட்டு தலைமை தேவபிரபு, முத்துக்குமரன், ரமேஷ், நாமக்கல் பெரியசாமி, தர்மபுரி பழனிதுரை, வேடியப்பன் ஆகியோர்களும், வாலீஸ்வரன், ஆனந்சபாபதி, முருகன், எட்வர்ட்பால் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெரியதுரை, பொருளாளர் தமிழ்செல்வன், தலைமை நிலைய செயலாளர் சீனிவாசன், உயர்நிலை மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் சுரேஷ்பாபு, மாவட்ட சட்ட செயலாளர் மோகன், முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் மனோகரன், மேனாள் தலைவர் செல்வராஜ், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மதிலக செயலாளர் கமலக்கண்ணன், மாவட்ட தலைவர் நித்தியானந்தம், மாவட்ட செயலாளர் குப்புராஜ், மாவட்ட பொருளாளர் இளையராஜசேகர், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் செல்வம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். பாதிக்கப்பட்ட ஆசிரியர் முத்துசாமி ஏற்புரை, ரமேஷ் நன்றியுரை கூறினார்.

