மத்திய அரசின் சமர்த் திட்டத்தின் கைத்தறி நெசவு

Loading

கோவை
மத்திய அரசின் நெசவாளர் சேவை மையம் மற்றும் கோவை ராமநாதபுரத்திலுள்ள சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி பயிற்சி மையம் இணைந்து, 45 நாட்கள் மத்திய அரசின் சமர்த் திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவுத்திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் துவக்கவிழா 
கோவை ராமநாதபுரம் பகுதியில், சில்க் வில்லேஜ் கைத்தறி மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு, மத்திய அரசின் சேலம் நெசவாளர்கள் சேவை மையம் சார்பாக  “சமர்த் எனும் கைத்தறி நெசவு பயிற்சி வகுப்புகளின் 2ம் பதிப்பின்
துவக்க விழா நடைபெற்றது, இதனை, மத்திய அரசின், சேலம் நெசவாளர் சேவை மைய துணை இயக்குனர் கார்த்திகேயன், கோவை சர்தார் வல்லபாய் பட்டேல் ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியின் இயக்குனர் டாக்டர். அல்லிராணி, ஆவாரம்பாளையம் சர்வோதயா சங்க செயலாளர் சிவகுமார், ஜவுளி மற்றும் ஆடை தொழிலமைப்பு அறிவுரையாளர் ஜவுளித்துறை திறன் தலைவர் பெரியசாமி, ஈரோடு எட்ஜ் ஹைட்ரா வென்ட்சர் ஆலோசகர் பொன்னுச்சாமி, சில்க் வில்லேஜ் நிறுவனர் கைத்தறி முருகேசன்,
சில்க் வில்லேஜ் நிர்வாக அதிகாரிகள் பழனிவேல், ராஜாராம், முருகானந்தம், மற்றும் சில்க் வில்லேஜ் நிறுவனத்தின் ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். சுமார் 45 நாட்கள் அளிக்க படும் இப்பயிற்சி வகுப்புகளில் கைத்தறி, ஜக்கார்ட் டிசைனிங், மேட் வீவிங் உள்ளிட்ட வகுப்புகள் நடைபெற உள்ளது. இதில் பயிற்சி பெறும் நெசவாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்குவதுடன், அவர்களுக்கு
மத்திய அரசின் மூலமாக 90 சதவிகிதம் மாணியத்துடன், கைத்தறி, கைத்தறி உபகரணங்கள், மற்றும் எலக்ட்ரானிக் ஜக்காடு இயந்திரங்கள் வழங்குவதாகவும், அவர்களின் தொழில் வளர்ச்சிக்காக மத்திய அரசின் முத்ரா திட்டம் மூலமாக 50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை மாணியத்துடன் கூடிய கடனுதவி வழங்க உள்ளதாகவும்  செய்தியாளர்கள் சந்திப்பின் வாயிலாக சேலம் நெசவாளர் சேவை மைய துணை இயக்குனர் கார்த்திகேயன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0Shares