’அவர் ஒரு ஜென்டில்மேன்’…பிரபல நடிகரை பாராட்டிய ஜான்வி கபூர்!

Loading

’அவர் ஒரு ஜென்டில்மேன்’…பிரபல நடிகரை பாராட்டிய ஜான்வி கபூர்!

​​ஜான்வி தனது இரண்டாவது தெலுங்கு படமான பெத்தி பற்றி மனம் திறந்து பேசினார்.

நடிகை ஜான்வி கபூர், ராம் சரணுடன் நடிப்பது மகிழ்ச்சி என்றும், அவரை ஜென்டில்மேன் என்றும் கூறினார்

கடந்த 2-ம் தேதி வெளியான தனது இந்தி படமான சன்னி சன்ஸ்கரி கி துளசி குமாரியை விளம்பரப்படுத்தும்போது, ​​ஜான்வி தனது இரண்டாவது தெலுங்கு படமான பெத்தி பற்றியும் ராம் சரணுடன் பணிபுரிந்த அனுபவத்தை பற்றியும் மனம் திறந்து பேசினார்.

அவர் கூறுகையில், “எனக்கு ராம் சரண் சாரை ரொம்பப் பிடிக்கும். அவர் ஒரு அற்புதமான மனிதர். விடாமுயற்சியும் நேர்மையும் கொண்டவர். ஒரு பெரிய நட்சத்திரமாக இருந்தாலும், நேரத்திற்கு படப்பிடிப்புத் தளத்திற்கு வந்துவிடுவார். அது எனக்கு மிகவும் பிடிக்கும். பெத்தி படப்பிடிப்புத் தளங்களுக்குத் திரும்பிச் செல்ல நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்றார்.இந்தப் படத்தில் தனது பாத்திரம் தனித்துவமானது என்றும் அவர் கூறினார்.

0Shares