திருமண உறவில் இருந்து வெளியேறுகிறேன்- ஷீலா பகிரங்க அறிவிப்பு

Loading

திருமண உறவில் இருந்து வெளியேறுகிறேன்- ஷீலா பகிரங்க அறிவிப்பு

வளர்ந்து வரும் நடிகையான ஷீலா ராஜ்குமார் தன் எதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். பரத நாட்டிய கலைஞரான இவர் கூத்து பட்டறை நடத்தி வரும் தம்பி சோழன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதன் மூலம் பல நாடகங்களில் நடித்துள்ளார்.
ஷீலா, இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான ‘ஆறாது சினம்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர், ‘டூ லெட்’, ‘திரெளபதி’, ‘மண்டேலா’, ‘நூடுல்ஸ்’ போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளத்தில் வெளியான ‘கும்பளங்கி நைட்ஸ்’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஷீலா ராஜ்குமார் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், ஷீலா ராஜ்குமார் தனது திருமண உறவியில் இருந்து வெளியேறியுள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள அவர், “திருமண உறவிலிருந்து நான் வெளியேறுகிறேன். நன்றியும் அன்பும்” என்று தனது கணவரின் கணக்கை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். எதனால் ஷீலா திருமண உறவில் இருந்து வெளியேறினார் என்பதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *