மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது..தமிழக அரசு அறிவிப்பு!

Loading

2021, 2022, 2023 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.அதில் ஜே. சூர்யா திரைப்பட நடிகர்,சாய் பல்லவி திரைப்பட நடிகை மற்றும் பலருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப் பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்படுகிறது.

அதன்படி தற்போது, 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் வழங்கப்படவுள்ளது. கலைமாமணி விருது வழங்கக்கோரி வரப்பெற்ற விண்ணப்பங்கள் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் இயல், இசை, நாட்டியம், நாடகம், திரைப்படம், சின்னத்திரை, இசை நாடகம், கிராமியக் கலைகள் மற்றும் இதர கலைப் பிரிவுகள் என கலைப் பிரிவு வாரியாக பிரிக்கப்பட்டு, கலைமாமணி விருது பெறத் தகுதியுள்ள கலைஞர்களைத் தேர்வு செய்யப்பட்டு 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் பெறும் விருதாளர்களின் பெயர் பட்டியல் இணைப்பில் கண்டவாறு தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள அரசாணையில் அறிவித்துள்ளது. இந்த கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் விருது பட்டயம் வழங்கப்படும்.

மேலும், பாரதியார். எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் பாலசரசுவதி ஆகியோர் பெயரில் வழங்கப்படும் கலை வித்தகர்களுக்கான அகில இந்திய விருதுகளும் கீழ்கண்டவாறு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரதியார் விருது (இயல்) முனைவர் ந. முருகேச பாண்டியன்எம்.எஸ். சுப்புலட்சுமி விருது (இசை) பத்மபூஷன் டாக்டர் கே.ஜே. யேசுதாஸ்பாலசரசுவதி விருது (நாட்டியம்) பத்மஸ்ரீ முத்துகண்ணம்மாள்அகில இந்திய விருது பெறும் கலை வித்தர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலையுடன், 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம் வழங்கப்படும்.

2021 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெரும் கலைஞர்கள் பட்டியல்:க. திருநாவுக்கரசு எழுத்தாளர்
கவிஞர் நெல்லை ஜெயந்தா. இயற்றமிழ்க் கவிஞர்.எஸ். சந்திரசேகர் (எ) தங்கம்பட்டர் சமயச் சொற்பொழிவாளர்.பாபநாசம் அசோக் ரமணி குரலிசை. பா. சற்குருநாதன் ஓதுவார் திருமுறைதேவாரஇசை. டி. ஏ. எஸ். தக்கேசி தமிழிசைப் பாடகர். திருச்சூர் சி. நரேந்திரன் மிருதங்கம். என். நரசிம்மன் கோட்டு வாத்தியம். கோ. பில்லப்பன் நாதசுர ஆசிரியர். திருக்காட்டுப்பள்ளி டி. ஜே. சுப்பிரமணியன் நாதசுரம். கல்யாணபுரம் ஜி. சீனிவாசன் நாதசுரம். திருவல்லிக்கேணி கே. சேகர் தவில். நாட்டியம் வழுவூர் எஸ். பழனியப்பன் பரதநாட்டிய ஆசிரியர். பிரியா கார்த்திகேயன் பரதநாட்டியம். நாடகம் பூச்சி எஸ். முருகன் நாடக நடிகர். காரைக்குடி நாராயணன் நாடக இயக்குநர். என். ஏ. அலெக்ஸ் ஆர்மோனியம். திரைப்படம் எஸ். ஜே. சூர்யா திரைப்பட நடிகர். சாய் பல்லவி திரைப்பட நடிகை. லிங்குசாமி திரைப்பட இயக்குநர். ஜே. கே. (எ) எம். ஜெயகுமார் திரைப்பட அரங்க அமைப்பாளர். சூப்பர் சுப்பராயன் திரைப்பட சண்டைப் பயிற்சியாளர். சின்னத்திரை பி. கே. கமலேஷ் சின்னத்திரை நடிகர். இசை நாடகம் எம். பி. விசுவநாதன் இசை நாடக நடிகர். கிராமியக் கலைகள் வீர சங்கர் கிராமியப் பாடகர். நா. காமாட்சி பொய்க்கால் குதிரை ஆட்டம்
. எம். முனுசாமி பெரியமேளம். பி. மருங்கன் நையாண்டிமேள நாதஸ்வரம். கே. கே. சி. பாலு வள்ளி ஒயில்கும்மி. இதர கலைப் பிரிவுகள் வே. ஜீவானந்தன் ஓவியர் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெரும் கலைஞர்கள் பட்டியல்:2023 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெரும் கலைஞர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

0Shares