தோழர் திரு.ப.ஜீவானந்தம் அவர்கள் பிறந்ததினம்!.

Loading

பொதுவுடமைத் தலைவர். கொண்ட கொள்கைக்காகபல ஆண்டுகள் சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக,சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக வாழ்ந்தவர்!. தோழர் திரு.ப.ஜீவானந்தம் அவர்கள் பிறந்ததினம்!.

மகாத்மா காந்தியால் ‘இந்திய தேசத்தின் சொத்து’ என்று பாராட்டப்பட்டவரும் பொதுவுடைமை கொள்கைக்காக பாடுபட்டவருமான ப.ஜீவானந்தம் 1907ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதி நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி என்ற ஊரில் பிறந்தார்.

இவர் காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்துக்கான அறைகூவலால் ஈர்க்கப்பட்டார். அந்நியத் துணிகள் அணிவதை ஒழிக்க வேண்டும் என்ற திட்டத்தில் தேசபக்தர் திருகூடசுந்தரம் பிள்ளையின் பிரச்சார உரையை கேட்ட இவர், அன்றிலிருந்து கதராடை அணியத் தொடங்கினார். இவர் தீண்டாமை ஒழிப்பில் தீவிரமாக ஈடுபட்டார்.

1932-ல் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். சிறையில் இவரது சிந்தனைப்போக்கு மாறியது. கம்யூனிசக் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டார். இவரது 40 ஆண்டுகால பொதுவாழ்வில் ஏறக்குறைய 10 ஆண்டுகள் சிறையில் கழிந்தது. நாடு விடுதலை அடையும் வரை பல்வேறு சூழல்களில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டங்களுக்காக இவர் எழுதிய பாடல்களும் ஊர் ஊராகச் சென்று இவர் ஆற்றிய உரைகளும் தொழிலாளர்களை எழுச்சிபெறச் செய்தன.

தமிழக அரசு இவரது நினைவைப் போற்றும் வகையில் நாகர்கோவிலில் பொதுவுடைமை வீரர் ப.ஜீவானந்தம் மணிமண்டபம் அமைத்துள்ளது. புதுச்சேரியில் அரசுப் பள்ளிக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. தன்னலம் கருதாமல் இளைய தலைமுறையினருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த ப.ஜீவானந்தம், 1963ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதி தமது 55வது வயதில் மறைந்தார்.

0Shares