கேரட் அல்வா சாப்பிட்ட 150 பேருக்கு வாந்தி,மயக்கம்.. திருமண விழாவில் பரபரப்பு!

Loading

இனிப்பு உணவை தயாரிக்கும்போது சேர்க்கப்பட்ட கோவா மாவா என்ற மூலப்பொருளில் கலப்படம் செய்யப்பட்டதால் அதனை சாப்பிட்டவர்களுக்கு வயிற்று வலி, வாந்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது தெரிய வந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் மொராபாத்தில் தாகுர்த்வாரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பரித்நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசிரியர்.இவர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் இரவு விருந்தின்போது சைவம் மற்றும் அசைவம் இரண்டும் பரிமாறப்பட்டது என சொல்லப்படுகிறது .அப்போது உணவுடன் கேரட் அல்வாவும் பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து இரவு உணவு சாப்பிட்ட பிறகு, சில விருந்தினர்கள் வயிற்று வலி மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்டனர்.இதனால் திருமண விழாவில் பரபரப்பு ஏற்பட்டது .வயிற்று வலி மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்ட அவர்கள் உடனடியாக அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 150 பேருக்கு வயிற்று வலி மற்றும் குமட்டல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.மேலும் திருமண விருந்தில் விருந்தில் சுமார் 400 விருந்தினர்கள் கலந்துகொண்டனர் என கூறப்படுகிறது.

மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை பெற்றுவரும் அனைவரின் நிலையும் நார்மலாக உள்ளதாக என்று தாகுர்த்வாரா தொகுதியின் முன்னாள் தலைவர் கூறினார்.

இனிப்பு உணவை தயாரிக்கும்போது சேர்க்கப்பட்ட கோவா மாவா என்ற மூலப்பொருளில் கலப்படம் செய்யப்பட்டதால் அதனை சாப்பிட்டவர்களுக்கு வயிற்று வலி, வாந்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது தெரிய வந்துள்ளது.

 

 

0Shares