இடைத்தேர்தலில் வெற்றி..ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக பதவியேற்றார் வி.சி.சந்திரகுமார்!

Loading

ஈரோடு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் இன்று சென்னை தலைமை செயலகத்தில் சட்டமன்ற உறுப்பினராக வி.சி.சந்திரகுமார் பதவியேற்றார்.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 5-ந்தேதி நடந்து முடிந்தது. இதையடுத்து இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது . இதில் தொடக்கம் முதலே தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் முன்னிலை பெற்றுவந்தார். இதையடுத்து கடைசியாக 20 சுற்றுகள் முடிவில் வி.சி. சந்திரகுமார் 1,15,709 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

மேலும் அவரை எதிர்த்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மா.கி. சீதாலட்சுமி 24,151 வாக்குகள் பெற்றுள்ளார். இந்த நிலையில் 91,558 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இதில் நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழந்துள்ளது. இந்த தேர்தலில், நோட்டாவுக்கு 6,109 வாக்குகள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் இன்று சென்னை தலைமை செயலகத்தில் சட்டமன்ற உறுப்பினராக வி.சி.சந்திரகுமார் பதவியேற்றார்.

சபாநாயகர் அறையில் முதலமைச்சர் முன்னிலையில் வி.சி.சந்திரகுமார் ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். அப்போது அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.இந்நிகழ்வின் போது, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

0Shares