தொழிற்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் முற்றுகையிட்டு புகார் :

Loading

திருவள்ளூர் அடுத்த இராஜாபாளையம் கிராமத்தில் தார் தொழிற்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் முற்றுகையிட்டு புகார் : திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தாலுக்காவிற்குட்பட்ட மெய்யூர் ஊராட்சி இராஜாபாளையம் கிராமத்தில் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். ராஜபாளையம் மற்றும் எறையூர், மொன்னேவடு, சித்தம்பாக்கம், மெய்யூர், வேம்பேடு, தேவந்தவாக்கம்,சோமதேவன்பட்டு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட  கிராமங்களில் 1200 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சிறுகுறு விவாசியகள் பயிர் செய்து வருகின்றனர். விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வரும் இப்பகுதியில் திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டு பகுதியைச் சேர்ந்த வினேோத்குமார் மற்றும் அவரது தந்தை ஜெயபால் ஆகியோர் பெயரில் 1.87 ஏக்கர் நிலத்தை வாங்கி அங்கு தார் தொழிற்சாலை அமைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.  இதனால் ராஜபாளையம் கிராமத்தில் தார் தொழிற்சாலை அமையும் பட்சத்தில் நெற்பயிர், வேர்கடலை, உளுந்து, கேழ்வரகு, கம்பு மற்றும் தானியங்கள், தோட்ட பயிர்களின் உற்பத்தி மிகவும் பாதிப்பிற்குள்ளாகும். மேலும் பொது மக்களும்,  கால்நடைகளும்,  வயதான நபர்களும்,  கர்ப்பிணிப் பெண்களும்,  பச்சிளங்குழந்தைகளும்,  பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் பாதிப்பு ஏற்படக் கூடிய சூழ்நிலை உருவாகும்.  மேலும், இந்த கிராமத்தில் மேய்ச்சகால் புறம்போக்கு நிலத்தில் கால்நடை பிராணிகள், ஆடு, மாடு ஆகியவை மேய்ச்சல் இடத்தில் தனியாக பாதை அமைத்து பஞ்சாயத்து நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்து தார் தொழிற்சாலைக்கு சாலை அமைக்க முயற்சிப்பதாகவும், வெயில் காலங்களில் ஆடு மாடு தண்ணீர் குடிக்கும் சிறிய குட்டையை புதைத்துவிட்டு தார் தொழிற்சாலைகளுக்கு கிராம புறம்போக்கு இடத்தில் வழி பாதை அமைப்பதை தடுத்து நிறுத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் முற்றுகையிட்டு புகார் மனு அளித்தனர். இராஜாபாளையம் கிராமத்தில் தார் தொழிற்சாலை அமைத்தால் விவசாயம் முற்றிலும் அழிந்துவிடும் என்பதால் அதனை தடுத்து நிறுத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்ததையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.  இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *