அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு மற்றும் மக்கள் நலப் பேரவையின் சார்பில் இந்திய தேசத்தின் 75 வது குடியரசு தின விழா
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு மற்றும் மக்கள் நலப் பேரவையின் சார்பில் இந்திய தேசத்தின் 75 வது குடியரசு தின விழா
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு மற்றும் மக்கள் நலப் பேரவையின் சார்பில் இந்திய தேசத்தின் 75 வது குடியரசு தின விழா இன்று சென்னை வளசரவாக்கம் கிங்மேக்கர்ஸ் நிறுவனத்தின் அலுவலக வாயலில் மக்கள் நலப் பேரவை பொதுச் செயலாளர் டாக்டர் எஸ். ராஜசேகர் தலைமையில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி குடியரசு தின உறுதி மொழியை வாசித்தார், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அகில இந்திய பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் தேசியத் தலைவர் டாக்டர் S.ராஜேந்திரன் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.உடன் தலைமை நிலையச் செயலாளர் கார்த்திக், மேலாளர் சிவகுமரன், கிங் மேக்கர்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர்கள், மேலாளர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.